உடல் சூட்டை குறைப்பது எப்படி? | ஒரு சின்ன டிப்ஸ் ..! | உடல்நலம் | கிங் நியூஸ் 24x7

உடல் சூட்டை குறைப்பது எப்படி? | ஒரு சின்ன டிப்ஸ் ..! | உடல்நலம் | கிங் நியூஸ் 24x7
X

உடல்சூடு 

கோடைகாலங்களில் , சூரியக்கதிர்கள் நம்மை சுட்டெரித்துக் கொண்டிருக்கின்றன. இதனால் உடலில் எரிச்சல் ஏற்படுவதோடு, ஆற்றலை இழந்து, உடல் அதிக வெப்பம் அடையும். இப்படி உடல் வெப்பம் அதிகமானால், அதனால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படக்கூடும். அதில் தலைவலி முதல் முகப்பரு, பிம்பிள் போன்றவை வரை பலவற்றை சந்திக்கக்கூடும்.


அதுமட்டுமின்றி, பெரும்பாலானோர் சிறுநீர் கழிக்கும் போது கடுமையான எரிச்சலை உணர்வார்கள். அப்போது தான் பலரும் உடல் சூடு பிடித்துள்ளது என்று தெரிந்து கொள்வார்கள். மேலும் இந்த உடல் சூட்டை எப்படி தணிப்பது என்றும் யோசிப்பார்கள். உங்களுக்கும் அப்படி உடல் சூடு பிடித்திருந்தால், இந்த கட்டுரை பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இங்கு உடல் சூட்டை தணிக்கும் சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. சரி, அது என்னவென்று பார்ப்போமா


கோடையில் மற்ற காலங்களை விட அதிக அளவில் தண்ணீரைக் குடிக்க வேண்டும். ஏனெனில் சூரியக்கதிர்கள் நம் சருமத்தில் அதிக அளவில் படுவதால், நம் உடலில் உள்ள நீர்ச்சத்துக்கள் குறைந்துவிடும். மேலும் நீர்ச்சத்து குறைவதால் உடலின் வெப்பநிலையும் அதிகரிக்கும். எனவே இக்காலத்தில் தண்ணீரை அதிக அளவில் குடித்து வந்தால், அவை உடல் சூட்டைத் தணிக்கும்


ஏலக்காயில் குளிர்ச்சியூட்டும் தன்மை உள்ளது. எனவே 2 கப் தண்ணீரில் ஒரு ஏலக்காயைப் போட்டு கொதிக்க விட்டு, பின் வடிகட்டி, குளிர வைத்து குடித்து வந்தால், அவை உடல் சூட்டைக் குறைக்கும்.


வெந்தயம் உடல் வெப்பத்தைக் குறைக்க உதவும் பொருட்களில் முதன்மையான ஒன்று. அதற்கு 1 டீஸ்பூன் வெந்தயத்தை இரவில் படுக்கும் போது, ஒரு டம்ளர் நீரில் போட்டு ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை குடிக்க வேண்டும். அல்லது அதன் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் அப்படியே வாயில் போட்டு விழுங்க வேண்டும். இதனாலும் உடல் வெப்பம் குறையும்.


Next Story