ஹூண்டாய் கோனா EV காருக்கு எதிராக களமிறங்கும் - Tata Harrier எலக்ட்ரிக் காரில் 500KM ரேஞ்சு!!!!
Tata Harrier EV கார் இந்தியாவில் 500KM ரேஞ்சு வசதியுடன் வெளியாகும் என்று தெரிகிறது. இந்த கார் பிரீமியம் SUV செக்மென்ட்டில் ஹூண்டாய் கோனா EV காருக்கு எதிராக விற்பனை செய்யப்படும்.
இந்தியாவில் வரும் 2024 ஆம் ஆண்டு டாடா நிறுவனம் புதிதாக Harrier EV காரை வெளியிடும். இந்த கார் 500 KM ரேஞ்சு வசதியுடன் வெளியாகும். இப்போது விற்பனை செய்யப்பட்டுவரும் டாடா நிறுவனத்தின் Nexon EV 465 KM ரேஞ்சு செல்லும் திறன் பெற்றுள்ளது. இதை விட அதிக திறன் கொண்டதாக ஹாரியர் எலக்ட்ரிக் கார் இருக்கும்.
Harrier EV இந்த ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. இதே கார் ICE வடிவிலும் இப்போது கிடைக்கிறது. இதில் முன்பக்கம் முக்கோண வடிவ LED ஹெட் லேம்ப், புதுமையான கிரில் வசதி, புதிய அலாய் வீல், பிரெஷ் LED டைல் லைட், முன்பக்கம் மற்றும் பின்பக்கம் முழு நீளத்திற்கு LED லைட் பார் வசதி இருக்கும்.
காரின் உட்புறம் 10.25 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் கலர் இன்ஸ்ட்ருமன்ட் கிளஸ்டர், எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், ஆட்டோ ஹோல்டு வசதி, வென்டிலேட் சீட், பேனரோமிக் சன் ரூப், டிரைவிங் மோட் உள்ளிட்டவை இருக்கின்றன.
இப்போது விற்பனை செய்யப்படும் நெக்சோன் EV காரின் டாப் மாடலில் இருக்கும் வசதிகள் ஹாரியர் EV காரின் பேஸ் மாடல் வசதிகளாக இருக்கும். இவற்றில் இடம்பெறும் இன்ஸ்ட்ருமன்ட் கிளஸ்டர் மூலம் மொபைல் கனெக்டிவிட்டி, மியூசிக், நோட்டிபிகேஷன், வெப்ப அளவு, கடிகாரம் உள்ளிட்டவை தெரியும்.
பாதுகாப்பு விஷயத்திலும் டாடா ஹாரியர் EV சிறந்த விளங்கும். இதற்கு காரணம் சமீபத்தில் வெளியான Safari மற்றும் Harrier facelift மாடல்கள் இந்தியாவிலேயே மிகவும் பாதுகாப்பான கார்கள் என்ற பெயரை எடுத்தன. Global NCAP மாற்று Bharat NCAP பாதுகாப்பு சோதனையில் முழு 5 ஸ்டார்களை பெற்று மிகவும் பாதுகப்பான கார்கள் என்ற பெயரை பெற்றுள்ளன.