ஹோண்டா நிறுவனத்தின் CB200X பைக் மாடல் அப்டேட் !!!

Update: 2024-05-31 04:55 GMT

CB200X பைக் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஹோண்டா CB200X ஆனது Honda Hornet 2.0ஐ பைக்கின் அட்வென்ச்சர் வெர்ஷனை அடிப்படையாகக் கொண்டது. இது ஒரு பீஃபியர் ADV போன்ற வடிவமைப்பு மற்றும் பிளாக் பேட்டர்ன் டயர்களைக் கொண்டுள்ளது, இது ஒளி பாதைகளுக்கு ஏற்றதாக அமைகிறது.

இந்த பைக்கில் தற்போது அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த சிஸ்டம் வழங்கப்படுவதால், பைக்கின் கிளட்ச் லீவரை சிரமம் இன்றி பயன்படுத்த முடியும்.

ஸ்லிப்பர் வசதி மூலம், பைக்கின் கியரை குறைக்கும் போது வீல் லாக் ஆவதை தடுக்கும். CB200X மாடல் ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்கை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இந்த பைக்கின் முன்புறம் சற்றே உயர்த்தப்பட்டு இருக்கிறது. இது பைக்கை ஓட்டுவோருக்கு மிகவும் வசதியாக இருக்கும்.

இந்த பைக் -ல் வேறு எந்த அம்சங்களும் மாற்றப்படவில்லை. இந்த பைக்கில் புதிய ஃபேரிங், உயரமான வின்ட்-ஸ்கிரீன் உள்ளிட்டவை வழக்கமான அட்வென்ச்சர் பைக் போன்ற தோற்றத்தை வழங்குகிறது.

ஹோண்டா CB200X மாடலில் 184.4 சிசி, ஏர்-கூல்டு, சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 17 ஹெச்.பி. பவர், 15.9 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News