தமிழ்நாட்டில் சொகுசு கார்களை முன்பதிவு செய்யும் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !

Update: 2024-07-29 10:05 GMT

ஆட்டோமொபைல்

தமிழ்நாட்டில் சொகுசு கார்கள் விற்பனை அமோகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் ஆடி, லம்போர்கினி, BMW, ஃபெராரி போன்ற சொகுசு கார்களை முன்பதிவு செய்யும் பணக்காரர்களின் எண்ணக்கை அதிகரித்து வருகிறது.

2022-23ல் 5797 கார்கள் வாங்கப்பட்ட நிலையில், 2023-24ல் 8,475ஆக அதிகரித்துள்ளது. நடப்பாண்டில் அதிகபட்சமாக சென்னையில் 4 ரோல்ஸ் ராய்ஸ் உட்பட 1668 சொகுசு கார்களும், கோவையில் 510 சொகுசு கார்களும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

கொரோனாவிற்கு பிறகு நிறைய இளம் தொழிலதிபர்கள் சொகுசு கார்களை வாங்க ஆர்வம் காட்டுவதாகவும், 70% பேர் 50 வயதுக்கு குறைவானவர்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News