விற்பனைக்கு அறிமுகமானது புதிய மாருதி சியாஸ் கார்… விலை எவ்வளவு தெரியுமா?
எக்கச்சக்க அம்சங்களுடன் புதிய மாருதி சியாஸ் கார் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் சிறப்பம்சங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்!!
By : King 24x7 Desk
Update: 2023-10-16 09:35 GMT
கடந்த 2014 ஆம் ஆண்டு அறிமுகமான மாருதி சியாஸ் கார் மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் விற்பனையில் முதலிடம் வகித்துவரும் நிலையில் தற்போது பல கூடுதல் அம்சங்களுடன் மாருதி சியாஸ் கார் மேம்படுத்தப்பட்டு ஃபேஸ்லிஃப்ட் எனப்படும் புது மாடலாக விற்பனைக்கு வந்துள்ளது.
சிறப்பம்சங்கள்:-
- புதிய மாருதி சியாஸ் கார் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைக்கும். பெட்ரோல் மாடல் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் வசதிகளை பொறுத்து 7 வேரியண்ட்டுகளிலும், டீசல் மாடல் 4 வேரியண்ட்டுகளிலும் விற்பனைக்கு கிடைக்கும். விலை குறைவான சிக்மா வேரியண்ட், நடுத்தர விலையிலான டெல்ட்டா, ஸீட்டா வேரியண்ட்டுகள் மற்றும் அதிகபட்ச வசதிகள் கொண்ட ஆல்ஃபா வேரியண்ட்டில் விற்பனைக்கு கிடைக்கும். புதிய மாருதி சியாஸ் காரில் முக்கிய மாற்றமாக 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுக்கு பதிலாக 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 103 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும்.
- பெட்ரோல் மாடலானது மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும். பெட்ரோல் மேனுவல் மாடலானது லிட்டருக்கு 21.56 கிமீ மைலேஜையும், பெட்ரோல் ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 20.28 கிமீ மைலேஜையும் தரும் என்று நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
- டீசல் மாடலில் 1.3 லிட்டர் மல்டிஜெட் எஞ்சின் தக்க வைக்கப்பட்டு இருக்கிறது. இந்தத எஞ்சின் 89 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டும் கிடைக்கும். டீசல் மாடலானது லிட்டருக்கு 28.09 கிமீ மைலேஜை தரும் என்று மாருதி சுஸுகி தெரிவிக்கிறது.
- புதிய மாருதி சியாஸ் காரில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஸ்பீடு அலர்ட் சிஸ்டம் ஆகியவை நிரந்தர பாதுகாப்பு அம்சமாக கொடுக்கப்பட்டு இருக்கிறது.
- பெட்ரோல் மாடல் ரூ.8.19 லட்சம் முதல் ரூ.10.97 லட்சம் வரையிலும், டீசல் மாடல் ரூ.9.19 லட்சம் முதல் ரூ.10.97 லட்சம் இடையிலான விலையில் விற்பனைக்கு கிடைக்கும்.
- இந்த காரின் கலர்களை பொருத்தவரை நெக்ஸா ப்ளூ, மெட்டாலிக் மெக்மா க்ரே, பியர்ல் மிட் நைட் பிளாக், பியர்ல் சன்கேரியா ரெட், பியர்ல் மெட்டாலிக் டிக்னிட்டி பிரெளன், மெட்டாலிக் பிரிமியம் சில்வர், பியர்ல் ஸ்னோ ஒயிட் என மொத்தம் 7 விதமான கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.