யாரும் வாங்க மாட்றாங்க - ராயல் என்ஃபீல்டுக்கு வந்த சோதனை ! அதிரடியாக எடுக்கப்பட்ட முடிவு | கிங் நியூஸ்

Update: 2025-01-06 12:40 GMT

ராயல் என்பீல்ட் 

ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனத்தின் அடையாளமே அதன் புல்லட் (Bullet) பைக்குகள் ஆகும். ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தை பற்றி அறியாதவர்கள் கூட புல்லட் பைக்குகளை பற்றி அறிந்து வைத்துள்ளனர். அந்த அளவிற்கு பிரபலமான புல்லட் பைக்கை இனி இந்த அம்சத்துடன் வாங்க முடியாத வண்ணம், புல்லட் பைக்கின் வேரியண்ட்களுள் ஒன்றை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் சைலண்டாக நிறுத்திக் கொண்டுள்ளது. சரியாக 1 வருடத்திற்கு முன் 2024ஆம் ஆண்டு ஜனவரியில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த வேரியண்ட்டின் விற்பனை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

கிளாசிக், ஹண்டர் உள்ளிட்டவை எல்லாம் சமீப காலத்தில் வெளிவந்த மாடர்ன் ராயல் என்ஃபீல்டு பைக்குகள் ஆகும். அதுவே புல்லட் ஆனது இந்த நிறுவனத்தில் இருந்து நீண்ட காலமாக விற்பனை செய்யப்பட்டு கொண்டிருக்கும் பைக் ஆகும். முதல்முறையாக 1932ஆம் ஆண்டில் இலண்டனில் நடைபெற்ற கண்காட்சி ஒன்றில் ராயல் என்ஃபீல்டு புல்லட் பைக் காட்சிக்கு நிறுத்தப்பட்டது என சொன்னால் நம்ப முடிகிறதா?


 



மழை நின்றாலும் தூரல் நிற்பது இல்லை என்பதுபோல், ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு சென்ற போதிலும், அவர்கள் உருவாக்கிய ராயல் என்ஃபீல்டு பைக்குகள் தான் சுதந்திரத்துக்கு பின் இந்திய இராணுவத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டன.

1952க்கு பிறகு இராணுவத்துக்கு ஏற்ற பைக் என்றால் அது புல்லட் என இந்திய அரசாங்கமே கூறும் அளவிற்கு புல்லட் பைக்குகளை பார்த்து பார்த்து ராயல் என்ஃபீல்டு உருவாக்கியது. கடந்த காலங்களில் இருந்து புல்லட் பைக்குகள் 250சிசி, 350சிசி மற்றும் 500சிசி என்ஜின்கள் உடன் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், தற்சமயம் விற்பனையில் இருப்பது புல்லட் 350 பைக் மட்டும்தான். புல்லட் 350 பைக்கை கடந்த 2023 செப்டம்பர் மாதத்தில் ராயல் என்ஃபீல்டு மேம்படுத்தி அறிமுகம் செய்தது. அதுவரையில் இல்லாத அளவுக்கு 2023இல் அறிமுகம் செய்யப்பட்ட நியூ-ஜென்ரேஷன் (New-Generation) புல்லட் 350 பைக் மாடர்னான தோற்றத்தில் இருந்தது.

இந்த நிலையில்தான், புல்லட் 350 பைக்கில் கடந்த 2024 ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்த மிலிட்ரி சில்வர் வேரியண்ட்டை (Military Silver Variant)-ஐ நீக்கி ராயல் என்ஃபீல்டு நிறுவனம் புதிய 2025ஆம் ஆண்டை துவங்கியுள்ளது. மிலிட்ரி சிவப்பு மற்றும் மிலிட்ரி கருப்பு என இரு கலர் ஆப்ஷன்களில் புல்லட் 350 பைக்கின் மிலிட்ரி சில்வர் வேரியண்ட் விற்பனை செய்யப்பட்டு வந்தது.


அறிமுகத்தின்போது, இந்த இரு கலர் ஆப்ஷன்களிலும் ஒரே மாதிரியாக புல்லட் 350 மில்ட்ரி சில்வர் பைக்கின் விலை ரூ.1,73,562 ஆக நிர்ணயிக்கப்பட்டது. மிலிட்ரி சில்வர் வேரியண்ட் மட்டுமில்லாமல், தனியாக 'மில்ட்ரி' என்கிற வேரியண்ட்டிலும் புல்லட் 350 பைக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இரண்டிற்கும் வித்தியாசம் என்னவென்றால், மிலிட்ரி சில்வர் வேரியண்ட்டில் பைக்கின் பெட்ரோல் டேங்க் மற்றும் சைடு பேனல்கள் (Side Panels)-இல் சில்வர் நிறத்தில் பின்ஸ்ட்ரிப்ஸ் (Pinstrips) வழங்கப்பட்டு வந்தது.


அதாவது, பைக்கின் அந்த பகுதிகளில் பளிச்சென்று சில்வர் நிற பார்டர்கள் தெரியும். இவற்றை ராயல் என்ஃபீல்டு தொழிலாளர்கள் தங்களது கைப்பட வரைந்துக் கொடுத்தனர். அந்த வேலையை தற்போது ராயல் என்ஃபீல்டு நிறுவனம் நிறுத்திக் கொண்டுள்ளது; அவ்வளவுதான். மற்றப்படி, மில்ட்ரி சிவப்பு மற்றும் மிலிட்ரி கருப்பு கலர் ஆப்ஷன்களில் மில்ட்ரி வேரியண்ட்டில் எப்போதும்போல் புல்லட் 350 பைக் கிடைக்கும். டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்தில் தீபாவளி, தசரா உள்ளிட்ட பண்டிகைகளை டார்க்கெட் செய்து புல்லட் 350 பைக்கில் பட்டாலியன் கருப்பு (Battalion Black) என்கிற புதிய கலர் ஆப்ஷனை அறிமுகம் செய்தது. இதில், தங்க நிறத்தில் பின்ஸ்ட்ரிப்ஸ் மற்றும் 3டி ராயல் என்ஃபீல்டு லோகோ வழங்கப்படுகிறது. கோல்டன் நிறத்தில் பின்ஸ்ட்ரிப்ஸ் கிடைக்கும்போது, சில்வர் நிறத்தை நிறைய பேர் விரும்பவில்லை. இதனால், மிலிட்ரி சில்வர் வேரியண்ட்டை அதிகமானோர் தேர்வு செய்யாததால் தற்போது அதன் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது

Tags:    

Similar News