சைக்கிள் கண்டுபிடிப்பின் கதைதான் என்ன?
1814-ஆம் ஆண்டில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த டிரைஸ் ஸர்ப்ரான் என்பவரின் சிந்தனையில் தோன்றியதே இன்றைய சைக்கிள்.
ஒருமுறை அவர் முழு நாணயம் ஒன்றை மேஜை மேல் உருட்டிவிட்டார். விழாமல் அது சிறிது தூரம் நேராக ஓடி பிறகு கீழே விழுந்தது. அதைக்கண்ட டிரைஸ், நாணயம் உருளும்போது' செங்குத்தாக நேரே போனதைப்பற்றி யோசித்தார். மரச்சக்கரம் ஒன்றை உருவாக்கி அதை உருட்டிப் பார்த்தார். பிறகு இரு சக்கரங்களைச் செய்தார்; ஒரு சக்கரத்திற்குப் பின்னால் சிறிது இடைவெளி விட்டு மற்றொன்றை இணைத்தார். இடைவெளியின் நடுவே ஓர் இருக்கை அமைத்து, அதில் உட்கார்ந்துகொண்டு, கால்களைத் தரையில் உந்தி சைக்கிளை ஓட்டினார். அந்த சைக்கிளில் வெல்பிரேக் முதலியன இல்லை.
1816-இல இந்த மாதிரி சைக்கிளை பிரெஞ்சுக்காரர் ஒருவா தயாரித்து விற்பனை செய்தார். 1839-இல் சைக்கிளில் மாற்றங்களைச் செய்தவர் கிர்க் பாட்ரிக் மாக்மில்லன் என்பவர்தான். சைக்கிளில் பிரேக், ஹாண்டில் பார் போன்றவற்றைப் பொருத்தியவர் இவரே.
இந்த சைக்கிள் அமைப்பு 25 ஆண்டுகள் வழக்கத்தில் பீரி லால்மெண்ட் என்னும் பிரான்ஸ் நாட்டுக்காரர் முன்பக்கச் சக்கரங்களுக்கு பெடலை முதலில் அமைத்தார்.
இதற்குப் பிறகு முன்சக்கரத்தைப் பெரிதாகவும், பின்சக்கரத்தைச் சிறிதாகவும் அமைத்து ஒரு சைக்கிளை மிசாக்ஸ் என்பவர் அமைத்தார். முன்சக்கரத்தில் பெடல் அமைக்கப்பட்டது. இது மணிக்கு சுமார் 30 கிலோ மீட்டர் சென்றது. ஆனாலும் பயணம் மிகவும் கடினமாக இருந்தது. இந்த சைக்கிளுக்கு 'பென்னி பார்த்திங்' என்று பெயர் சூட்டப்பட்டது.
சுவிட்சர்லாந்து நாட்டைச் சார்ந்த ரெனால்டு என்பவர் இரு சக்கரங்களையும் ஒரே மாதிரியாக இரும்பில் செய்தார். பல் சக்கரம், இரண்டு சக்கரங்களையும் இணைக்கும் சைக்கிள் செயின் முதலியவற்றை அமைத்தார். சக்கரங்கள் எளிதாகச் சுற்ற பால்பேரிங்ஸ் முதலியவற்றையும் உபயோகப்படுத்தி னார். சைக்கிளில் ஸ்பிரிங் சீட்டைப் பொருத்தியவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜான் டன்லப் என்பவர். இவரே சைக்கிளின் சக்கரங்கள் மேடு பள்ளங்களில் எளிதாக உருள காற்றடித்த ட்யூப்களையும் அவற்றின் மேல் டயரையும் பொருத்தியவர்.
1814-ஆம் ஆண்டு ஜான் டிரைஸ் ஸர்ப்ரான் யோசனையில் உதித்த சைக்கிள் கண்டுபிடிப்பு பலரின் முயற்சிக்குப் பிறகு 1889-இல் ஸ்காட்லாந்தின் ஜான் டனலப் என்பவரால் இன்று நாம் பயன்படுத்தும் முழுமையான சைக்கிளாக வெளிவந்தது.