Suzuki- யின் புதிய eWX எலெக்ட்ரிக் கார் !
இந்தியாவில் அடுத்த ஆண்டு தான் eVX என்ற காம்பேக்ட் எஸ்யூவி மாடலை, தங்களுடைய முதல் எலெெக்ட்ரிக் கார் மாடலாக வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது மாருதி சுஸூகி.
இந்த eWX மாடலை EV மினிவேகன் எனவும் குறிப்பிடுகிறது சுஸூகி.
eWX எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் - ன் வெளிப்புறம் பாக்ஸியான டிசைனுடன் ஒரு எஸ்யூவி ஸ்டைலில் இருக்கிறது. இந்த eWX எலெக்ட்ரிக் கார். 3,395 மிமீ நீளம், 1,475 மிமீ அகலம் மற்றும் 1,620 மிமீ உயரத்துடன் நான்கு பேர் வரை அமர்ந்து பயணிக்கும் வகையில் இந்த எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் மாடலை வடிவமைத்திருக்கிறது சுஸூகி.
கான்செப்ட் eWX-ன் உட்புறத்தில் நியான் நிற சீட்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. வெளிப்புறமும் ஆங்காங்கே நியான் அக்செண்டைப் பார்க்க முடிகிறது.
eVX என்ற காம்பேக்ட் எஸ்யூவி 2026 அல்லது 2027ம் ஆண்டு இதன் வெளியீட்டை நாம் எதிர்பார்க்கலாம்.