எகிப்தில் இந்திய சுதந்திர தின விழா

Update: 2024-08-17 09:26 GMT

எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்தியாவின் 78வது சுதந்திர தினத்தையொட்டி கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. இந்திய தூதர் அஜித் வி குப்தே இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதனையடுத்து இந்திய ஜனாதிபதியின் குடியரசுத் தலைவரின் உரையின் சுருக்கத்தை வாசித்தார். பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இந்திய சமூகத்தினர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

Tags:    

Similar News