அமீரக குறுநாடக விழா போட்டியின் 9வது வருட நிகழ்ச்சி

அமீரக குறுநாடக விழா போட்டியின் 9வது வருட நிகழ்ச்சி;

Update: 2024-11-09 11:50 GMT

அமீரக குறுநாடக விழா போட்டியின் 9வது வருட நிகழ்ச்சி 

தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்து, அமீரகத்தில் பல ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களுக்கு முத்தமிழான இயல் இசை நாடகம் மற்றும் பல்வேறு கலைகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகளுக்கு குறை இருந்ததே இல்லை. இயல், இசை போன்ற தனித்திறமைக்கான அங்கீகாரங்கள் கிடைக்க பல வாய்புகள் வருடம் முழுதும் அமையும். என்றாலும், நாடக கலை என்பது குழுவாக அரங்கேற்றப்படவேண்டும் என்பதால் வாய்புகள் அரிதே!! மேலும் ஒரே மேடையில் பல நாடகங்கள் நடத்தவும் சவால்கள் அதிகம்!!

Advertisement

ஆமீரக குறு நாடக விழா அமைப்பாளர்கள் 2016 ம் வருடம் முதல் இவர்களின் திறமையையும் ஆர்வத்தையும் கருத்தில் கொண்டு மேடையேறும் வாய்ப்பினை அமைத்து போட்டியாக நடத்தி வருகிறார்கள். கதை வசனம் எழுதி, அது தேர்ந்தெடுக்கப்பட்டதும், நடிக நடிகையருடன் ஒத்திகை செய்து, கதைகேற்ற பின்புல அரங்க அமைப்புகளை திட்டமிட்டு, பதாகைகள் அழைப்புகள் தயார் செய்து, கதாபாத்திரத்திற்கு ஏற்ப ஒப்பனை மற்றும் உடை அலங்காரங்களை முடிவு செய்து என மிகப்பெரும் பணியில் ஈடுபட வேண்டியிருக்கும். உடன் பல்வேறு குழுக்கள் மோதுவதால் மற்றவரை காட்டிலும் சிறப்பாக மிளிர முற்படுவர்.நூறு குறுநாடகங்களுக்கு மேலாக குழுக்கள் மேடை கண்டிருக்கும் இவ்விழாவில் பல நாடக உலக பிரபலங்கள் பங்கு கொண்டு சிறப்பித்துள்ளனர்.

இவ்வருடம் மேடை நாடகங்களில் தன் கலை உலக வாழ்வை துவங்கி தரமான பல மலையாள படங்கள், தமிழ் திரைப்படங்களில் குணசித்திர வேடங்கள், சின்னத்திரையில் தன் நடிப்பால் உலகின் பல தமிழ் ரசிகர்களை கவர்ந்த திருமதி ரேணுகா குமரன் அவர்கள் தலைமையேற்று சிறப்பித்தார். 12 நாடகங்களில், 100 பங்கேற்பார்களின் திறனை கண்டு மகிழ்ந்து, மதிப்பிட்டு, அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள் முன் அது குறித்த விமர்சனங்களை பகிர்ந்து, பரிசுகளும் நினைவு பரிசும் வழங்கி சிறப்பித்தார்.

அமீரகத் தமிழர்களின் நாடகக் கலை ஆரவத்தை மேம்படுத்த விழா அமைப்பாளர்களின் இப்பெரும் முயற்சிக்கு உறுதுணையாக நிற்கும் புரவலர்களுக்கு தங்கள் நன்றியை தெரிவித்து தகவல்களை பகிர்ந்தார்கள் விழா அமைப்பாளர்கள் ஆனந்த் மற்றும் ரமா மலர்.

Tags:    

Similar News