Bigg Boss 7Tamil: திடீரென பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய விஜய் வர்மா..ஏன் தெரியுமா?

Bigg Boss season 7 midweek eviction vijay varma walkout;

Update: 2024-01-09 12:28 GMT

bigg boss vijay varma

Bigg Boss 7Tamil:பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து மிட் வீக் எவிக்‌ஷனில் விஜய் வர்மா வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியானது. 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பலர் உள்ளனர். முந்தைய சீசன்களில் இல்லாத அளவுக்கு இந்த பிக்பாஸ் சீசனில் இரண்டு பிக்பாஸ் வீட்டுகள், 5 வைல்டு கார்டு என்ட்ரி, மிட் வீக் எவிக்‌ஷன் என சற்று மாற்றங்களை கொண்டிருந்தது பிக்பாஸ் நிகழ்ச்சி. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களை கடந்துள்ளது. பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் கடந்த வாரம் விசித்ரா எவிக்‌ஷன் செய்யப்பட்டார். 

பிக்பாஸ் வீட்டில் மூத்த போட்டியாளராக விசித்ரா இருந்தாலும் சக போட்டியாளர்களுக்கு டஃப் கொடுத்து வந்தார். இதனால், விசித்ரா இறுதிப்போட்டிக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெளியேறினார். அடுத்ததாக பிக்பாஸ் வீட்டில் விஷ்ணு, தினேஷ், விஜய் வர்மா, மாயா, அர்ச்சனா, மணி இருந்தனர். 

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்த விஜய் வர்மா மிட்வீக் எவிக்‌ஷனில் வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்த விஜய் வர்மா போட்டியாளர்களிடம் கோபத்தை காட்டியதுடன், வன்முறையாக பேசினார். இதனால், விமர்சனத்துக்கு ஆளான அவர் 26 வது நாளில் எவிக்ட் ஆகி வெளியேறினார். அதை தொடர்ந்து கடந்த 56வது நாளில் மீண்டும் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்கு விஜய் வர்மா வந்தார். 

Tags:    

Similar News