பணப்பெட்டியுடன் வெளியேறிய பூர்ணிமா - திடீரென பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த பள்ளி மாணவி

பணப்பெட்டியுடன் வெளியேறிய பூர்ணிமா - திடீரென பிக்பாஸ் வீட்டிற்கு பள்ளி மாணவி;

Update: 2024-01-05 12:46 GMT

Bigg Boss 7 tamil

ரூ.16 லட்சம் பண பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டில் இருந்து பூர்ணிமா வெளியேறியதும், ஸ்கூல் யூனிஃபார்ம் போட்ட பெண் ஒருவர் பிக்பாஸ் வீட்டிற்கு என்ட்ரி கொடுத்துள்ளார். 

கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன்7 நிகழ்ச்சி 97வது நாளை நெருங்கியுள்ளது. முதலில் 18 அதன்பின்னர் வைல்டு கார்டு என்ட்ரி என 23 போட்டியாளர்கள் என பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஒவ்வொரு வாரமும் மக்களின் வாக்குகள் அடிப்படையில் போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டனர். தற்போது  பிக்பாஸ் வீட்டில் மாயா, பூர்ணிமா, விசித்ரா, அர்ச்சனா, விஜய் வர்மா, மணி, விஷ்ணு மற்றும் தினேஷ் உள்ளிட்டோர் உள்ளனர். பிக்பாஸ் சீசன் 7 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் டைட்டிலை வெல்லப்போகும் போட்டியாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இதற்கிடையே பிக்பாஸ் வீட்டில் பணப்பெட்டி டாஸ்க் வைக்கப்பட்டது. அதில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் ஒருவர் அந்த பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறலாம். அதன்படி ஒரு லட்சம் ரூபாயுடன் வந்த பணப்பெட்டியின் மதிப்பு ஒவ்வொரு நாளும் உயர்ந்து ரூ.16 லட்சத்தை எட்டியது. பணப்பெட்டியின் மதிப்பு உயர்ந்ததால் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான பூர்ணிமா தனது முடிவை மாற்றிக் கொண்டார். பணப்பெட்டியுடன் வெளியேறிய பூர்ணிமா - திடீரென பிக்பாஸ் வீட்டிற்கு பள்ளி மாணவி

ரூ.16. லட்சம் இருக்கும் பணப்பெட்டியை எடுத்துக் கொண்ட பூர்ணிமா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற முடிவெடுத்தார். முன்னதாக பிக்பாஸ் வீட்டில் இருப்போரின் காலில் விழுந்து தான் இதுவரை பேசிய அனைத்துக்கும் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். பூர்ணிமா வெளியேறிய நிலையில் பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா, விசித்ரா, விஜய் வர்மா, தினேஷ், மணி, மாயா உள்ளிட்ட 7 பேர் உள்ளனர். 

இந்த நிலையில் இன்று ஒளிபரப்பாக இருக்கும் எபிசோடுக்கான புரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதில், ஸ்கூல் யூனிஃபார்ம் போட்ட பெண் ஒருவர் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளார். அவரை பார்த்தவுடன் பிக்பாஸ் போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த இருவரும் தங்களை போட்டியாளர்களிடம் அறிமுகப்படுத்தி கொண்டனர். 

இருவரும் விஜய் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள சின்ன மருமகள் சீரியலில் ஹீரோ, ஹீரோயினாக நடிப்பதாகவும், சீரியலின் புரோமோஷனுக்காக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். அதை கேட்ட போட்டியாளர்கள் அதிர்ச்சியில் இருந்து வெளியே வந்து பெருமூச்சு விட்டனர். 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள சின்ன மருமகள் என்ற புதிய சீரியலில் ஹீரோவாக நவீனும், ஹீரோயினாக ஸ்வேதாவும் நடித்துள்ளனர். இவர்கள் இருவருமே பிக்பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுத்துள்ளனர். அடுத்ததாக வெளியான 3வது புரோமோவில் நவீன் தனது நண்பரான விஷ்ணுவை பார்த்து, ”உனக்காகவே பிக்பாஸ் பார்த்து வருகிறேன்” என்று கூறியுள்ளார். இந்த வாரன் இறுதியில் 4 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிக்கு 3 பேர் மட்டுமே செல்வார்கள். அவர்கள் யார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். 

Tags:    

Similar News