முதல் முறையாக லோகேஷிடம் ஏற்பட்ட மாற்றம்.. கூலி படத்தில் குத்து பாடலுக்கு நடனமாடிய பூஜா ஹெக்டே | தமிழ் சினிமா | கிங் நியூஸ் 24x7
Update: 2025-02-27 10:17 GMT

கூலி
சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், நாகர்ஜுனா, உபேந்திரா, ஷோபின் ஷபீர் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தற்போது இவர்களுடன் நடிகை பூஜா ஹெக்டேவும் இணைந்துள்ளார். ஆம், கூலி படத்தில் நடிகை பூஜா ஹெக்டே ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.
இதுவரை லோகேஷ் கனகராஜின் படத்தில் தனியாக குத்து பாடல் என ஒன்று இருந்ததே இல்லை. முதல் முறையாக கூலி படத்தில் தான் குத்து பாடலை வைத்துள்ளார்.
ஜெயிலர் படத்தில் எப்படி காவாலா பாடலுக்கு தமன்னா நடனமாடி ஹிட் ஆனதோ, அதே போல் இப்படத்தில் கூலி படத்தில் பூஜாவின் நடனமும் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.