நடிகர் ஜோஜு ஜார்ஜ் இயக்கத்தில் தரமான தமிழ் திரைப்படம் - PANI | king news 24x7

பனி திரைப்படம் தமிழில்
ஜோஜு ஜார்ஜ்.. மலையாள சினிமாவில் துணை நடிகராக, உதவி இயக்குநராக பல வருடங்களை உழைப்பில் பதியமிட்டவர். தற்போது ஹீரோவாகத் தன் தடத்தை ஆழமாகப் பதித்து வருபவர்

2018-ல் ஜோசப் என்ற க்ரைம் த்ரில்லர் படத்தின் மூலம் யதார்த்த நடிப்பால் மாநிலங்கள் தாண்டி கவனம் ஈர்த்தார். தமிழிலும் `ஜகமே தந்திரம்' மூலம் அறிமுகமாகி மணிரத்னம்- கமல் காம்போவின் 'தக்-லைஃப்' படத்திலும், கார்த்திக் சுப்புராஜ்- சூர்யா காம்போவுடன் ஒரு படத்திலும் என பிஸியாக வலம் வரும் நடிகர். இவர் 'பணி' என்ற மலையாள படத்தை முதன்முறையாக இயக்கியிருக்கிறார்.

அதில் ஹீரோவாக நடித்திருப்பதோடு அறிமுக இயக்கத்தில் ஒரு கேங்ஸ்டர் ரிவெஞ்ச் சினிமாவைத் தந்திருக்கிறார். நடிகராக ஜோஜு ஜார்ஜ் பற்றி நமக்கு நன்கு தெரியும். `பணி'யில் ஒரு இயக்குநராக அவர் 'பணியை' சிறப்பாகச் செய்திருக்கிறார் .