ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் சூர்யாவின் 45 -வது திரைப்படம்

Update: 2024-10-15 05:02 GMT

 Suriya

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

`மூக்குத்தி அம்மன்', `வீட்ல விஷேஷம்' ஆகிய படங்கள் மூலம் இயக்குநரான அறிமுகமான ஆர்.ஜே. பாலாஜி சூர்யாவை வைத்து அடுத்த படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இத்திரைப்படம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி, " இத்திரைப்படம் பிளாக்பஸ்டர் என்டர்டெயினராக இருக்கும்!" எனப் பதிவிட்டுள்ளார்.

ஏற்கெனவே ஆர்.ஜே. பாலாஜி பேட்டியில் நடிகர் விஜய்க்கு கதை சொல்லியிருப்பதாக கூறியிருந்தார். அக்கதைக்கு திரைக்கதை எழுதுவதற்கு அதிக காலம் தேவைப்படும் என்பதால் அத்திரைப்படம் அப்போது தாமதமானது. தற்போது விஜய்யும் அவருடைய 69-வது படம் தான் அவரின் சினிமா கரியரின் கடைசி திரைப்படம் என்றும் அறிவித்துவிட்ட நிலையில் `விஜய்க்கு சொன்ன அதே கதையை தான் ஆர்.ஜே. பாலாஜி தற்போது சூர்யாவுக்கும் சொல்லி ஓகே டிக் வாங்கியிருக்கிறார். அந்த கதைதான் படமாகிறது, என்ற தகவலும் பேசப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News