ஆம்பூர் அருகே கறவை மாடுகள் உயிரிழப்பு

ஆம்பூர் அருகே தீவனங்களை சாப்பிட்ட 6 கறவை பசுக்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-01-14 10:50 GMT

உயிரிழந்த மாடுகள்

 திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பார்சனப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட அங்கியாபள்ளி பகுதியில் அஸ்மத் என்பவர் மாட்டுப்பண்ணை நடத்தி வருகிறார்.. இந்நிலையில் இந்த மாட்டுப்பண்ணையில் 20 பசுக்கள் உள்ள நிலையில், 10 பசுக்கள் பால் கறவை கறந்து வரும் நிலையில், மாட்டுப்பண்ணையில் பணியாற்றும் பணியாளர் பீர் பூசா, மரவள்ளிக்கிழங்கு மாவு, குச்சித்தீவனம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பால் கறக்கும் கறவை பசுகளுக்கு கொடுத்துள்ளார்

. இதனை தொடர்ந்து பீர் பூசா, குச்சி தீவனம், கிழங்கு மாவு சாப்பிட்ட 6 கறவை மாடுகளுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, வயிறு வீங்கி, வாயில் ரத்தம் வடிந்து 6 கறவை பசுகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இதனை தொடர்ந்து இதுகுறித்து தகவலறிந்த கதவாளம் கால்நடை மருத்துவர் சங்கீதா உயிரிழந்த கறவை பசுக்களுக்கு பிரேத பரிசோதனை மேற்க்கொண்ட பசுக்கள் உயிரிழந்தது குறத்து அறிய பசுவின் மாதிரிகளை வேலூர் அரசு கால்நடை ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.. மேலும் கறவை பசுக்கள், தீவனங்கள் சாப்பிட்டதால் உயிரிழந்ததா? அல்லது வேறேதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் உமரபாத் காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

மேலும் 5 லட்சம் மதிப்பிலான 6 கறவை பசுக்கள் ஒரே நேரத்தில் உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News