திருமண கொஸ்டின் அறுக்கின்ற வேன் ஓடையில் கவிழ்நது விபத்து

கடையால் அருகே திருமண கோஷ்டினர் சென்ற வேன் ஓடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளனது.;

Update: 2024-07-04 15:21 GMT

விபத்தில் சிக்கிய வேன்

குமரி மாவட்டம் பேச்சிப்பாறையை சேர்ந்த ஒரு வாலிபருக்கும், காரகோணம் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் நேற்று திருமணம் நடந்தது. மாலையில் மணமக்கள் மறு வீடு நிகழ்ச்சிக்கு சென்றனர். பின்னர் மணமக்கள், உறவினர்களுடன் வேனில் மணமகன் வீட்டுக்கு புறப்பட்டனர்.

இரவு கடையால் அருகே உள்ள ஆம்பாடி பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்திசையில் ஒரு கார் வந்துள்ளது. அதற்கு வழிவிடும் வகையில் வேனை, டிரைவர் ஒதுக்கி உள்ளார். அப்போது எதிர் பாராதவிதமாக திருமண கோஷ்டியினர் சென்ற வேன், கால்வாய் ஓடையில் இறங்கியது.

Advertisement

இதனால் நிலை தடுமாறியவேன், டிரைவரின் கட்டுப் பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. வேனில் இருந்த திருமண கோஷ்டியினர் என்ன நடந்தது என்பதை உணர்வதற்குள் வேன் கவிழ்ந்ததால் கூச்சலிட்டனர். அவர்களது சத்தம் கேட்ட அக்கம்பக்க த்தினர் அங்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் கவிழ்ந்த வேனுக்குள் சிக்கிய திருமண கோஷ்டியினரை மீட்டனர். அதிர்ஷடவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்ட வில்லை இதுகுறித்து கடையல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News