பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை"
பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை";
By : King 24x7 Website
Update: 2023-12-27 17:51 GMT
பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை"
காஞ்சிபுரம், பல்லவர்மேடு பகுதியில் உள்ள வ.உ.சி., தெருவைச் சேர்ந்தவர் சுகுமாரன் மகன் பிரபாகர், 34. இவர் மீது கொலை மற்றும் மிரட்டல் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள், காஞ்சிபுரம் காவல் நிலையங்களில் உள்ளன. காவல் துறையில், 'ஏ பிளஸ்' ரவுடி பிரிவில், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தார். காஞ்சிபுரம் நீதிமன்றத்தில், வழக்கு ஒன்றில் ஆஜராகிவிட்டு, தன் வீடு அமைந்துள்ள பல்லவர்மேடு பகுதிக்கு, நேற்று காலை 11:00 மணியளவில் பிரபாகர் சென்றுள்ளார். அப்போது, பிரபாகரை பின்தொடர்ந்து காரில் வந்த மர்ம நபர்கள், கத்தியால் வெட்ட முயன்றனர். இதை கண்ட பிரபாகர், புதுப்பாளையம் தெருவில் உள்ள வீடு ஒன்றின் பின்புறம் புகுந்தார். இருப்பினும், விடாமல் துரத்தி வந்த மர்மநபர்கள், சரமாரியாக வெட்டினர். முகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படுகாயமடைந்த பிரபாகர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, கொலை செய்த ஐந்து பேர் கொண்ட கும்பல், அதே காரிலேயே தப்பியோடினர். தகவலறிந்த சிவகாஞ்சி போலீசார், மாவட்ட எஸ்.பி., சுதாகர், கூடுதல் எஸ்.பி., வெள்ளத்துரை உள்ளிட்டோர், சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, தடயங்களை சேகரித்தனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். கொலை செய்யப்பட்ட பிரபாகர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால், முன்விரோதம் காரணமாக, கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். இதையடுத்து, உடலை கைப்பற்றிய சிவகாஞ்சி போலீசார், பிரேத பரிசோதனைக்காக, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்."