பட்டு விவசாயிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் - துறை உதவி இயக்குனர் கைது
பட்டு விவசாயிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் - நாமக்கல் பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் கைது
By : King 24x7 Website
Update: 2023-12-19 15:44 GMT
பட்டுக்கூடு வளர்ப்பு விவசாயியிடம் மல்பெரி செடி பயிரிட அரசு வழங்கும் மான்யத்தை விடுவிக்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டுப் பெற்ற பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் எஸ்.முத்துப்பாண்டியன் லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். நாமக்கல் பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனராக இருப்புவர் எஸ்.முத்துபாண்டியன் (37) இந்நிலையில் ராசிபுரம், சேலம் சாலையில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடு ஏலவிற்பனை மையத்தில் பட்டு வளர்ப்பு விவசாயிகளுக்கான கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் மல்பெரி செடி வளர்க்க விவசாயிகளுக்கு வழங்கும் மான்யம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. ராசிபுரம் அருகேயுள்ள கூனவேலம்பட்டிபுதூர் பகுதியை சேர்ந்த பட்டு வளர்ப்பு விவசாயி தேகதீஸ்வரன் என்பவரிடம் அரசின் மான்யம் ரூ.1 லட்சம் விடுவிக்க ரூ.25 ஆயிரம் லஞ்சமாக உதவி இயக்குனர் முத்துபாண்டியன் ஏற்கனவே கேட்டதாக தெரிகிறது. இதனையடுத்து தேகதீஸ்வரன் நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ராசிபுரத்தில் நடந்த விவசாயிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் ரூ.20 ஆயிரம் கேட்டுப்பெற்ற போது நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி., சுபாஷினி, ஆய்வாளர் நல்லம்மாள் தலைமையிலான போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி கைது செய்துள்ளனர்.