கடை உடைப்பு - நடவடிக்கை எடுக்க போலீசில் புகார்
கடையை உடைத்து சேதப்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீஸில் புகார்
By : King 24x7 Website
Update: 2023-12-06 06:09 GMT
விருதுநகர் புல்லலக்கோட்டை சாலையைச் சார்ந்தவர் சரவணகுமார். இவர் மேற்கு பாண்டியன் காலனி சர்வீஸ் சாலையில் தனபாண்டியனின் இடத்தை வாடகைக்கு பெற்று அதில் பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது. அந்த இடத்திற்கு வாடகை ரூ. 5 ஆயிரம் கொடுத்து வந்த நிலையில் தனபாண்டியன் வாடகையை ரூ. 25 ஆயிரம் ஆக உயர்த்தி, சரவணகுமாரிடம் வாடகையை உயர்த்தி அளிக்க வேண்டும். இல்லையெனில் இடத்தை காலி செய்யுமாறு தனபாண்டி கூறியுள்ளார். ஆனால் சரவணகுமார் வாடகையை உயர்த்தி வழங்காமல் நீதிமன்றத்தை நாடுவதற்காக வழக்கறிஞர் மூலம் நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தனபாண்டியன் பாலவிக்னேஷ், யோகேஷ், பாண்டியன், பாண்டியராஜன், சாந்தகுமார், குருபிரசாத் ஆகியோரை அழைத்துச் சென்று சரவணனின் கடையை அடித்து நொறுக்கி, பொருட்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சரவணன் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிப் பதிவுகளைக் கொண்டு மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.