போக்சோ வழக்கில், வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை - மகிளா நீதிமன்றம்
போக்சோ வழக்கில், குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.50,000 அபராதம் விதித்து பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Update: 2023-12-07 05:16 GMT
பெரம்பலூர் மாவட்டம் பிலிமிசை கிராமத்தைச் சேர்ந்த சிறுமியை கடந்த 2017 ஆம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக அதே ஊரை சேர்ந்த சுரேஷ் வயது 32, என்பவர் மீது கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த வழக்கு பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் விசாரணை முடிக்கப்பட்டு டிசம்பர் 6ம் தேதி குற்றம் நிரூபிக்கப்பட்டதால் வழக்கின் குற்றவாளியான சுரேஷ் என்பவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.50,000 அபராதமும் அபராதம் விதிக்கப்பட்டது, அபராதம் கட்டத் தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்கும் வேண்டும் என்றும் பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி தனசேகரன் தீர்ப்பளித்தார். இதனைத் தொடர்ந்து குற்றவாளி சுரேஷ்சை போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.