டெஸ்டான திரட்டிப்பால் செய்முறை பாக்கலாமா !!
தேவையான பொருட்கள் ;
பால் - 1லிட்டர்
நாட்டு சர்க்கரை/வெல்லம் - 1/2கப்
ஏலக்காய் பொடி - 1/4ஸ்பூன்
நெய் - 2ஸ்பூன்
செய்முறை ;
அடி கனமான பாத்திரத்தில் பால் ஊற்றி காய வைக்க வேண்டும்.பால் பொங்கி வந்ததும் அடுப்பை மீடியமான தீயில் வைத்து கரண்டியால் கலந்து கொண்டே இருக்கவும். பால் ஏடு படியாமல் கரண்டியால் கலந்து கொண்டே இருக்கவும். ஒரு லிட்டர் பால் கால் பங்கு பாலாக வற்றி வரும் வரை கலந்து விட்டு கொண்டே இருக்கவும்.பிறகு இதில் நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து அடுப்பை குறைந்த தீயில் வைத்து கரண்டியால் கிளறவும்.நடுவில் நெய் ஊற்றி கிளறி கொள்ளவும். பால் நன்கு சுருண்டு கடாயில் ஒட்டாமல் திரண்டு வரும் வரை கிளறி கொடுத்து இறக்கவும். பரிமாறும் போது பாதம் துண்டுகளை நறுக்கி மேலே அலங்கரித்து பரிமாறவும். சூப்பரான சுவையான திரட்டி பால் ரெடி.