திரும்ப திரும்ப சமைப்பீங்க..! இந்த ரகசியம் தெரிஞ்சா..!
சுரைக்காய் என்றாலே உங்க வீட்டுல முகம் சுழிக்கிரங்களா.? முதலில் இதன் மருத்துவ குணங்களை தெரிந்து கொள்வோம்.
சுரைக்காய் உடல் சூட்டை குறைக்கும். சுரைக்காயில் வைட்டமின் பி,சி சத்துக்களை அதிகம் கொண்டுள்ளது. சுரைக்காயின் சதைப் பகுதியை வெட்டி ரசமாக்கி அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை ப்ழச்சார்றை சேர்த்து பருகி வர சிறுநீரக கோளாறு, சிறுநீர் கட்டு, நீர் எரிச்சல், நீர் கட்டு ஆகிய பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு இந்த சுரைக்காய்தான்.இவ்வளவு மருத்துவ குணம் உள்ள இந்த சுரைக்காய் நாம் கண்டிப்பா சாப்பிடனுங்க.இத எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம் .
தேவையான பொருட்கள்
சுரைக்காய்-1
நிலக்கடலை 10
சீரகம் 1/4 டீஸ்பூன்,
மிளகு- 5 ,
கருவேப்பிலை- 2 கொத்து ,
வெங்காயம்-1
பூண்டு-5 பல்
மிளகாய் காய்ந்தது -4
தே.எண்ணெய்-4 டேபிள் ஸ்பூன்
கடுகு , சிறிது உளுத்தம் பருப்பு கடலைப்பருப்பு தேவையான உப்பு.
செய்முறை :
சிறிது அளவு நிலக்கடலை ஒரு கைப்பிடி அளவு எடுத்து ஒரு பாத்திரத்தில் 8 மணிநேரம் ஊற வைத்து கொள்ளவும் .
பின் சுரைக்காயை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள். விதை நீக்கி விடவும்.
அடுத்து நீங்கள் அந்த நிலக்கடலையை கழுவி அந்த நீரை வடிகட்டி விடுங்கள்.
பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் அந்த நிலக்கடலை, அத்துடன் சிறிதளவு சீரகம், நான்கைந்து மிளகு, சிறிது கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் , பூண்டு ,மிளகாய் தேவைக்கு ஏற்ப போட்டு நீர் விட்டு அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும் .
ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தாளிப்பதற்குஎண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், அதில் கடுகு, கடலைப் பருப்பு உளுத்தம் பருப்பு போட்டு அத்துடன் சிறிது நறுக்கி வைத்த வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை கலந்து தாளிக்கவும்.
பின்னர் அரிந்து வைத்துள்ள சுரைக்காயை அதில் கொட்டி வதக்கி சிறிது நீர் சேர்த்து வேக வைக்கவும்.
வெந்ததும், மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள அந்த நிலக்கடலை கலவையை அதில் கொட்டி சிறிதளவு உப்பு மஞ்சள் சேர்த்து சுரக்காய் வெந்ததும் ஒரு கொதி வந்தவுடன் இறக்கி விடவும்.
குழம்பு சிறிது கெட்டியானவுடன் அடுப்பை அணைத்துவிடுங்கள். சூடான சாதத்திற்கு பிசைந்து சாப்பிடுங்கள் நன்றாக இருக்கும்.