சோள ரவை புளி உப்புமா !!
By : King 24x7 Angel
Update: 2024-11-08 11:30 GMT
Corn semolina tamarind salt
தேவையான பொருட்கள்:
சோள ரவை புளி - 1 கப்
புளி - சின்ன எலுமிச்சை பழ அளவு
தாளிக்க:
நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு - 1/2 ஸ்பூன்
உளுந்தம்பருப்பு - 1 ஸ்பூன்
பெருங்காயம் - 1/4 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4 பாதியாக கிள்ளியது
கறிவேப்பிலை இலை - 5
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு, உளுந்தம் பருப்பு தாளித்து கறிவேப்பிலை பெருங்காயம் போடவும். பிறகு மூன்று கப் தண்ணீரில் புளியை ஊறவைத்து கரைத்து வாணலியில் ஊற்றவும். உப்பு சேர்க்கவும். நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் சோள ரவையை போட்டு நன்றாக கிளறவும். நன்றாக வெந்தவுடன் இறக்கி வைக்கவும். சோள ரவை உப்புமா தயார். டயட் இருப்பவர்களுக்கு ஏற்ற உணவாகவும் உள்ளது.