மையோனைஸ் புடிக்குமா இனிமே கடைல வாங்கதிங்க !!
பாஸ்ட் புட் கடைகளில் கிடைக்க கூடிய அனைத்து உணவுகளுக்கும் சைட் டிஷ் ஆக மையோனிஸ் தான் கொடுக்கிறார்கள். அதிக காசு கொடுத்து கடைகளில் வாங்கி ஆரோக்கியத்தையும் கெடுத்துக் கொள்ள வேண்டாம்.
தேவையான பொருட்கள்:
முட்டை – 2
ரீஃபைண்ட் ஆயில் – 3 கப்
மிளகு – 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு – 5 பல்
உப்பு -1/4 டீஸ்பூன்
சர்க்கரை – 1/2 டீஸ்பூன்
எலும்பிச்சை சாறு – 4 டீஸ்பூன்
செய்முறை :
முதலில் இரண்டு முட்டையை மிக்ஸி ஜாரில் சேர்த்து விடுங்கள். பிறகு மிளகு ஒரு டேபிள் ஸ்பூன் (வெள்ளை மிளகு இருந்தால் இன்னும் சுவை நன்றாக இருக்கும்). பூண்டு ஐந்து பல், (மிளகு பூண்டு சேர்ப்பதால் வாடை வராது) உப்பு கால் டீஸ்பூன், சர்க்கரை ஒரு டீஸ்பூன் இதை அனைத்தும் சேர்த்து விட்டு கடைசியாக எலும்பிச்சை பழ சாறும் சேர்த்து கொள்ளுங்கள். ஒரு சுற்று விட்டு விட்டு, மறுபடியும் ஹை டு லோ என்று அரைக்க வேண்டும். நாம் சேர்த்த அனைத்தும் ஒன்றாக கலந்திருக்கும். இப்போது இதில் ஒரு கப் எண்ணெய் ஊற்றி(வாசனை எண்ணெய் தவிர்க்கவும்) அதே போல் மீண்டும் அரைத்துக் கொள்ளுங்கள். பிறகு மீதமிருக்கும் 1 கப் எண்ணெய் ஊற்றி இதே முறையில் அரைத்துக் கொள்ளுங்கள். இதே போன்று மூன்றாவது முறை ஒரு கப் எண்ணெயயை முழுவதுமாக ஊற்றி விட வேண்டாம். எவ்வளவு உங்களுக்கு திக்காக தேவையோ அந்த அளவிற்கு எண்ணெயை ஊற்றி அரைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு புடிச்ச மயோனிஸ் தயார். இது மூன்று அல்லது நான்கு நாட்கள் வரை பிரிட்ஜில் வைத்திருந்து உபயோகப்படுத்தலாம். தேவைப்படுபோது உடனடியாக வீட்டிலே தயார் செய்து கொள்ளலாம்.