சமையலறை ரகசியங்கள் !!

Update: 2024-09-13 02:30 GMT

சமையலறை ரகசியங்கள்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தக்காளி, எலுமிச்சை, புளி சாதம் செய்கையில் சாதத்தை நல்லெண்ணெய் விட்டு கிளரி பின் செய்தால் சாதம் உதிரி உதிரியாய் இருக்கும்.

தோசை மாவிற்கு அரிசியுடன் ஜவ்வரிசி சேர்த்து ஊறவைத்தால் தோசை மொறுமொறுப்பாக இருக்கும்.

பூரி மாவில் தண்ணீருக்கு பதில் பால் சேர்த்து ஊறவைத்தால் சுவையாக இருக்கும்.

உப்பு மஞ்சள் எலுமிச்சை சாறு வெள்ளம் சேர்த்து 30நிமிடம் ஊறவைத்தால் பாகற்காய் கசக்காது 'வடை எண்ணை உறியாமல் இருக்க வெந்த உருளைக் கிழங்கு மசியலை சேர்க்கவும்.

கடலை மாவுக்குப் பதிலாக ஒரு பங்கு பச்சரிசியும், ஒரு பங்கு பச்சை பருப்பும் கலந்து மிக்ஸியில் சன்னமாக அரைத்து உப்பு காரம் போட்டு பஜ்ஜி செய்யலாம்.

மணத்தக்காளி வத்தல் குழம்பை இறக்கியவுடன் அதில் சுட்ட அப்பளத்தை நொறுக்கிப் போட்டால் ருசியே ருசிதான்.

எலுமிச்சை சாதம் கலக்கும் போது ஒரு ஸ்பூன் வதக்கிய வெங்காய துருவலை சேர்த்தால் வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும்.

Tags:    

Similar News