முளை தானிய சத்து மாவு பானம் (எனர்ஜி டிரிங்)
ஏழைகளுக்கு ஏற்ற அருமையான, சத்தான பானம்
தேவையான பொருட்கள்:
கேழ்வரகு 250 கிராம்
கோதுமை 250 கிராம்
கம்பு 150 கிராம்
பச்சைப்பயறு 100 கிராம்
மூக்குக்கடலை 100 கிராம்
கொள்ளு 50 கிராம்
செய்முறை:-
எல்லா தானியங்களையும் எட்டு மணி நேரம் ஊற வைத்து எட்டு மணி நேரம் ஈரத்துணியில் கட்டி முளைக்க விடவும் முளைத்த தானியங்களை காயவைத்து வறுக்காமல் அரைக்கவும். அரைத்த மாவை சலிக்காமல் பாட்டிலில் பத்திரப்படுத்தவும்.
தேவையானபோது ஒரு டம்ளர் நீரில் 1 டீஸ்பூன் அல்லது இரண்டு டீஸ்பூன் மாவு கலந்து இனிப்பிற்கு வெல்லம் அல்லது தேன்ள தூள் சேர்க்கலாம்.
இனிப்பு வேண்டாம் என்பவர்கள் மிளகுத்தூள், பிளாக்சால் கலந்தும் காரமாகச் சாப்பிடலாம்.
சூடாக சாப்பிட விரும்புபவர்கள் நீரில் மாவைக் கரைத்து குடுபண்ணி இனிப்பு அல்லது உப்புக் கலந்து பருகலாம்.
பயன்கள்:
எளிமையான, மலிவான, ஊட்டம் மிகுந்த சத்து பானம் பள்ளிச் சிறுவர்கள், பெரியவர்கள் தினமும் ஒரு வேளை அவசியம் பருக வேண்டும். டிபனுக்குப் பதில் காலை மாலை சாப்பிடலாம் நோஞ்சான் அன்பர்களுக்கு அவசியம் தினமும் கொடுக்க வேண்டும். உழைப்புக்கு தேவையான சக்தி, தெம்பு தரும் உடல் வனப்பு மிகும். காபி, டீக்கு பதில் மாற்று பானமாகவும் அமைகிறது குடல்புண் ஆறும் உடலுக்குத் தேவைான கார்போஹைட்ரேட்டும், அதிக புரதமும் இணைந்த அற்புதமான பானம் கடைகளில் அதிக விலை கொடுத்து வாங்கும் உணவுப் பொருட்களைவிட பல மடங்கு பலன் தரும் அதிசய உணவு. எல்லா அன்பர்களும் முளை தானியங்களை நமது உணவில் ஒரு அங்கமாகச் சேர்த்தால் புலால் உணவுகள் தேவைப்படாது .