நம்ம ஸ்டைல் ரசகுல்லா ரெசிபி !!!
தேவையான பொருட்கள் :
தண்ணீர் முற்றிலும் நீக்கப்பட்ட பனீர். 1/2கிலோ
மைதா மாவு. 10கிராம்
சர்க்கரை. 10 கிராம்
ரோஸ் எசன்ஸ். 4துளிகள்
ஏலக்காய். 10கிராம்(தோலுரித்தது)
சுடுதண்ணீர் 250 மி.லி
சர்க்கரை. 1கிலோ
தண்ணீர். 6 டம்ளர் அல்லது (தேவையான அளவு)
செய்முறை :
பன்னீரில் மைதா மாவு மற்றும் ரோஸ் எசென்ஸ் சேர்த்து பிசையவும் நன்கு பிசையவும். கடைசியாக 10 கிராம் சர்க்கரை சேர்த்து பிசைந்து உருண்டைகளாக உருட்டவும் . ஒவ்வொரு உருண்டையினுள்ளும் சிறிது ஏலக்காய் பொடி வைக்கவும் .
அடுப்பில் சர்க்கரை சிரப் கொதித்ததும் இந்த பனீர் உருண்டைகளை மூன்று அல்லது நான்காகப் போடவும். ( இவை ஒன்றோடொன்று மோத கூடாது ) 20 நிமிடங்கள் இந்த உருண்டைகளை 'சுகர் சிரப்'பில் வேகவிட வேண்டும். (ரசகுல்லா வெந்து விட்டதா என்று அறிய குளிர்ந்த தண்ணீரில் ரசகுல்லாவை போட்டால் மிதக்கக்கூடாது .
சர்க்கரை சிரப் ரொம்ப கெட்டியாகி விடாமல் இருக்க அவ்வப்பொழுது சுடு தண்ணீர் ஊற்ற வேண்டும் ..ரசகுல்லாக்கள் நன்கு ஆறியதும் பிரிட்ஜில் வைத்து இரண்டு நாட்களுக்குப் பின் சாப்பிட சுவை கூடும். மீந்த சர்க்கரை சிரப்பை ரசகுல்லா க்களின் மேலாக ஊற்றி வைக்கவும். அவ்வளவு தான் நம்ம ஸ்டைல் ரசகுல்லா தயார்.