ஸ்பைசியான கார்ன் புலாவ் !

Update: 2024-05-20 11:12 GMT

கார்ன் புலாவ்

கார்ன் புலாவ்

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - 1 கப்

உதிரி கார்ன் - 1/4 கப் (வெந்தது)

பீன்ஸ் - 4

கேரட் - 2 இன்ச் அளவு

வெங்காயம் - ௧

பச்சை மிளகாய் - 1

தேங்காய்ப்பால் - 1/2 டம்ளர்

கொத்துமல்லி தழை - சிறிதளவு

தாளிக்க,பட்டை - 1 இன்ச் அளவு

கிராம்பு, ஏலக்காய் பிரிஞ்சி இலை (பே லீஃப்) - தலா 1

எண்ணெய் - 4 டீஸ்பூன்

செய்முறை:

வெங்காயம், பீன்ஸ், கேரட், மல்லித்தழை இவைகளை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை லேசாக கீறி வைத்துக் கொள்ளவும். பின்பு அரிசியை மூன்று முறை கழுவி விட்டு ஊற வைக்கவும்.

குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் தாளிக்க கொடுத்தவைகளை போட்டு தாளிக்கவும்.

பின்பு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். ஓரளவு வதங்கியதும் நறுக்கின பீன்ஸ், கேரட், பச்சை மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பின்பு கார்ன், மல்லித் தழையை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

அதன்பின் ஊற வைத்திருக்கும் அரிசியை நன்கு தண்ணீர் இல்லாமல் வடிகட்டி அதில் சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும். பிறகு தேங்காய் பாலும், ஒரு கப் தண்ணீரும் சேர்த்து தேவையான அளவு உப்பும் சேர்த்து கொதிக்க விடவும்.

தண்ணீர் சுண்டும் நிலை அடையும் சமயத்தில் மூடியை போட்டு மூடி வெய்ட் போட்டு குறைந்த தீயில் ஏழு நிமிடம் வைத்து இறக்கவும். ஸ்டீம் போனதும் மூடியை திறந்து ஒரு முறை அடிவரை கிளறிவிட்டு வைக்கவும்.

Tags:    

Similar News