அசைவ பிரியர்களுக்கு சூப்பரான ரெசிபி .. நண்டு ஆம்லெட் !!!

Update: 2024-05-10 10:23 GMT

நண்டு ஆம்லெட்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஆம்லெட் அனைத்து வகையான உணவுகளுக்கும் பழக்கப்பட்ட மற்றும் பொதுவான டிஷ் ஆகும். ஆம்லெட் குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடும் உணவாகவும் இருக்கிறது. இதில் பிளைன் ஆம்லெட் ,ஆனியன் ஆம்லெட் ,மசாலா ஆம்லெட் என பலவகை இருந்தாலும் வித்தியாசமாக நண்டு ஆம்லெட் ட்ரை பண்ணி இருக்கீங்களா இல்லனா கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க.

தினமும் முட்டையை சாப்பிட்டு வந்தால், உடலுக்கு தேவையற்ற கெட்ட கொலட்ஸ்ட்ரால் குறைந்து, உடல் எடை கட்டுக்கோப்புடன் இருக்கும். முட்டை சாப்பிட்டால் மூளையானது மிகவும் ஆரோக்கியமாக இருக்கும் அதன் ஆற்றலும் அதிகரிக்கும். முட்டையை தவறாமல் தினமும் சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் வரும் ஆபத்தானது குறையும்.முட்டையில் புரதம் ரிபோப்லாவின், போலேட், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், செலினியம், மக்னீசியம், விட்டமின் A, E மற்றும் B6 அதிகமாக உள்ளதால், இவை தசை மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டத்தை அளிக்கிறது. முட்டையில் எலும்பின் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின் D மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக இருக்கிறது. எனவே இதை தினமும் சாப்பிடுவதால், நம் உடம்பில் உள்ள எலும்புகளின் வலிமை அதிகரிக்கச் செய்கிறது.

நண்டு சாப்பிடுவது மூளைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.மூளை சிறப்பாக செயல்படவும், நரம்பு மண்டலம் செயல்பாடுகளுக்கும் இந்த நண்டு உதவி செய்கிறது. குறைவான கலோரிகள் உள்ளதால், உடல் எடையை குறைக்கக் கூடியவர்களுக்கு நண்டு பெஸ்ட் சாய்ஸ்ஸாக உள்ளது.. இதிலுள்ள வைட்டமின் A கண்பார்வைக்கு உதவுகிறது. இப்போ வாங்க எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

முட்டை - 3

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2

சிறிது சிறிதாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2 அல்லது 3

சிறிது - மஞ்சள் தூள்

உப்பு - தேவைக்கேற்ப

மூன்று டேபிள் ஸ்பூன் - நண்டு கிரேவி

செய்முறை :

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் இரண்டையும் சேர்த்து நன்கு வதக்கி கொண்டு எடுத்துக் கொள்ளவும். முட்டையை நன்றாக அடித்து அதில் உப்பு, மஞ்சள் தூள், வதக்கி வைத்த மசாலா மூன்று டேபிள் ஸ்பூன் நண்டு கிரேவி சேர்த்து நன்கு கலக்கவும். பின்பு வழக்கம் போல் ஆம்பளை போட்டு இருக்கவும் இப்போ சூடான சுவையான நண்டு ஆம்லெட் ரெடி.

Tags:    

Similar News