ஆவாரம் பூ அள்ளித்தரும் அற்புத பலன்கள் !!!!
ஆவாரை முழுத் தாவரமும், துவர்ப்புக் குணமும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. வெதுவெதுப்பான நீரில் பொடியை சேர்த்து தேனுடன் கலந்து மூலிகை தேநீராக்கி குடிக்கலாம். இது நல்ல மலமிளக்கியாக செயல்படும். ஆவாரம் பூவை பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலுக்கு தீர்வாகிறது.
ஆவாரம் பூ பொடியை பாசிப்பயறு மாவு மற்றும் கடலை மாவில் கலந்து விடவும். இதில் பன்னீர் சேர்த்து குழைத்து சருமத்தில் பயன்படுத்தி வந்தால் சருமம் ரோஜா நிறம் போல் ஜொலிக்கும் என்பது உண்மை.ஆவாரம் பூ சரும பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிப்பதோடு சருமத்தில் உண்டாகும் காயங்களை சரி செய்யவும் உதவுகிறது. காயங்களை சுத்தம் செய்யும் போது ஆவாரம் பூ வேர் மற்றும் இலைகளை நீரில் கொதிக்க வைத்து இளஞ்சூடாக இருக்கும் போது காயத்தை கழுவி வந்தால் காயம் விரைவில் ஆறும். சருமத்தில் வீக்கம் இருந்தால் பட்டை தண்ணீருடன் சேர்த்து கொதிக்கவைக்கப்பட்டு சுத்தம் செய்து வந்தால் படிப்படியாக வீக்கம் குறைக்கும்.
பொடுகு பிரச்சனை இருப்பவர்கள் ஆவாரம் பூ பொடி, வெந்தயப்பொடி மற்றும் கற்றாழை ஜெல் மூன்றையும் சரிசமமாக கலந்து உச்சந்தலையில் தடவி விடவும் 30 நிமிடங்கள் கழித்து கூந்தலை ஷாம்பு கொண்டு அலசி எடுத்தால் பொடுகு பிரச்சனை நீங்கும். ஆவாரம் பூ விதைகள் மற்றும் கரிசலாங்கண்ணி இலைகள் சேர்த்த எண்ணெய் இளநரை பிரச்சனைக்கு உதவும்.
இது பாக்டீரியா வளர்ச்சி மற்றும் தொற்றுநோய்களைக் தடுக்கிறது. உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்றுகிறது. மலச்சிக்கலைத் தடுக்க உதவும் மலமிளக்கியாக செயல்படுகிறது. மாதவிடாய் சுழற்சியைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கிறது மற்றும் அதிக மாதவிடாய் ஓட்டத்தைத் தடுக்கிறது. ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியை அனுபவிக்கும் பெண்களுக்கு ஆவாரம் மலர் தேநீர் பயனுள்ளதாக இருக்கும். அதிகப்படியான இரத்த கொழுப்பைக் குறைக்க உதவுகிறது, பல தோல் கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.
திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத பெண்களுக்கு ஆவாரை பயன்படுகிறது. அதாவது, கருப்பட்டியுடன் ஆவாரைப் பூவை சேர்த்து உண்டு வந்தால், பெண்களுக்கு மலட்டுத் தன்மை நீங்கும். விரைவில் கர்ப்பம் உண்டாகும் வாய்ப்பு ஏற்படும்.