அதிக ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த சுக்கு !!
இஞ்சியை நன்றாகக் காயவைத்த பின்னர், அதில் உள்ள நீர் வற்றிய நிலையில் இருப்பதுதான் சுக்கு. சுக்கு எளிதில் கெடாது.
குழந்தைகளுக்கு வயிறு மந்தமாக இருந்தால் சிறிதளவு சுக்கை அரைத்து அவர்களுக்குக் கொடுக்கலாம்.
சுக்கு எந்த வகையான உணவையும் செரிமானம் அடைய செய்துவிடும். உடலில் உள்ள நச்சுக்களை முறித்து வெளியேற்றும். குடல்களையும், உணவுப் பாதையையும் சுத்தமாக்கும்.
மாதவிடாய் கால வயிற்று வலியை குறைக்க வெந்நீர் அல்லது பாலில் சுக்கு பொடியை கலந்து குடித்து வரலாம்.மாதவிடாய் காலம் என்பது பெண்களுக்கு அசோகரித்த ஏற்படுத்தக்கூடிய ஒன்று. அந்த சமயங்களில் ஏற்படும் இடுப்பு மற்றும் அடிவயிற்று தசைகளின் வலியை குறைப்பதில் சுக்கு மிகச் சிறந்த வீட்டு மருந்து என்று சொல்லலாம்.
உடல் எடையைக் குறைக்க சுக்கு உதவுகிறது. ஒரு டம்ளர் நீரில் அரை டீஸ்பூன் சுக்கு பொடியை கலந்து வெதுவெதுப்பாக சூடுபடுத்தி அதில் தேன் சேர்த்து அதனை தினமும் குடித்து வந்தால், அதில் உள்ள தெர்மோஜெனிக் ஏஜென்ட், கொழுப்புக்களை கரைத்து தொப்பையின் அளவை குறைத்து உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.
ரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைப்பதற்கு சுக்கு உதவியாக இருக்கும். சுக்கில் இருக்கும் பயோ ஆக்டிவ் மூலக்கூறுகள் நீரிழிவையும் ரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையின் அளவையும் கட்டுக்குள் கொண்டு வர உதவி செய்கின்றன.
நீண்டதூரப் பயணம் செய்வதால் தலைபாரம் ஏற்படும். தலையில் நீர் கோர்த்து இருந்தால், இரு புருவங்களுக்கு கீழ்ப்பகுதியில் வலி ஏற்படும். இதனை குணப்படுத்த சுக்கை உரசி அதில் சிறிதளவு பெருங்காயத் தூளை சேர்த்து தலையில் தடவினால் சிறிது நேரத்திலேயே நல்ல பலன் கிடைக்கும்.