மலிவா கிடைக்கும் கொத்தமல்லி இலையில் இத்தனை ஆரோக்கியமா !!
நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் முக்கிய பொருளாகவும், உணவை அலங்கரிக்கவும் கொத்தமல்லி இலைகள் பயன்படுகின்றன. இது வாசனை பொருளாகவும் நம் சமையலில் நம் பயன்படுத்துவது உண்டு. இந்த கொத்தமல்லி இலைகள் உணவு வகைகளில், பயன்படுத்தப்படுவது, மட்டுமில்லாமல் உடல் நலத்திற்குப் பலவகையான நன்மைகளை அள்ளித்தரும் ஒரு முக்கியமான மூலிகையாகவும் உள்ளது.
கொத்தமல்லி இலைகளில் தயமின், நியாசின், ரிபோஃப்ளேவின், வைட்டமின் சி, பாஸ்பரஸ், கால்சியம், சோடியம், பொட்டாசியம், ஆக்சாலிக் ஆசிட் போன்ற பல்வேறு வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும், மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்துக்கள் போன்றவற்றையும் இது உள்ளடக்கியுள்ளது.
கொத்தமலை இலைகளை அரைத்து முகத்தில் பூசுவதால் தோல் சுருக்கம் மற்றும் கருமை மறையும்.கொத்தமல்லி அரைத்து கண்களுக்கு மேலெ பற்று போடுவதால், கண் பிரச்சனைகள் குறைகிறது. கண்களுக்கு பலம் கிடைக்கிறது. கண்கள் பிரகாசம் ஆகிறது. கண்களுக்கு கீழே உள்ள சுருக்கங்கள் மற்ரறும் கண்களில் உள்ள கருவளையங்கள் போன்றவற்றை மறையவைக்க உதவுகிறது.
கொத்தமல்லி இலையில் ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கும் இயற்கை நொதிகள் உள்ளன. அஜீரணம், வீக்கம் மற்றும் வாயு போன்ற பொதுவான செரிமான பிரச்னைகளைத் தணிக்க அவை உதவும்.
கொத்தமல்லி இலைகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. நீரிழிவு நோயாளிகள் அல்லது ஆபத்தில் உள்ளவர்கள், உங்கள் உணவில் கொத்தமல்லி இலைகள் உட்பட ஒரு புத்திசாலித்தனமான தேர்வாக இருக்கும்.
கொத்தமல்லிக்கு ஆற்றும் குணம் அதிகம் உண்டு. இது நாளமில்லா சுரப்பிகளை நன்கு இயங்கச் செய்யும். மாதவிலக்கு ஒழுங்கின்மை, வலி ஆகிய பிரச்சினைகளை உடையவர்கள் தினம் கொத்தமல்லி இலை ஜூஸ் அருந்துவது நல்லது. கொத்தமல்லி இலையில் உடலில் வீக்கத்தைக் குறைக்கும் அழற்சி எதிர்ப்பு கலவைகள் உள்ளன. இது கீல்வாதம் போன்ற அழற்சி கோளாறுகளுக்கு அவை நன்மை பயக்கும்.