மருத்துவ குணமிக்க தர்ப்பை புல் !!
தர்ப்பை புல் அந்த காலத்திலிருந்து பாரம்பரிய மருத்துவத்தில், ஆன்மீக சடங்குகளில், மற்றும் இயற்கை வழிப்பாட்டு முறைகளுக்கும் முக்கிய பங்காக இருந்தது.
இதன் மருத்துவ நன்மைகள், ஆன்மீகப் பயன்பாடுகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கான பல பயன்கள்களை கொண்டது.முக்கியமாக இதில் மனிதன் சுவாசிக்கத் தேவையான பிராணவாயு அதிகமாக இருக்கிறது.
இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவை கொண்ட தர்பைப் புல் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கிறது.
கல்லீரல் பிரச்னை, உடல் உஷ்ணம் ஆகியவற்றை தவிர்ப்பதற்கும் இது பயன்படுகிறது.
சிறுநீரகம், கல்லீரல், குடல்புண், வாய்ப்புண் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் தர்ப்பைப் புல் கொண்டு காய்ச்சிய நீரைக் குடித்தால் அந்தப் பிரச்னைகள் நீங்கும்.
தர்ப்பைப் புல் தண்ணீர் சிறுநீரகப் பிரச்னையைப் போக்குகிறது. உடல் சூடு காரணமாக அடர் மஞ்சள் நிறத்தோடும், எரிச்சலோடும் சிறுநீர் கழிப்பவர்கள் கையளவு தர்ப்பைப் புல்லை எடுத்து சுடுநீரில் காய்ச்சி ஆறவைத்து, வடிகட்டிக் குடித்தால் அந்த உபாதைகள் நீங்கும்.
தர்ப்பையை குடிநீரில் போட்டு வைத்து, தினமும் அந்த நீரைக் குடித்தால் உடல் வலிமையும் புத்திகூர்மையும் ஏற்படும்.
தர்ப்பைப் புல் இருக்கும் இடத்தில் துர்சக்திகளின் நடமாட்டம் இருக்காது.
தர்ப்பைப் புல்லால் செய்யப்படும் பாய் விரிப்பில் படுத்து உறங்கினால் உடல்சூடு தணியும்; மன உளைச்சல் நீங்கும்; நல்ல உறக்கம் கிடைக்கும்; ஆரோக்கியம் நீடிக்கும்.
தர்ப்பை, சித்த மருத்துவத்தில் மட்டுமல்லாமல் , ஆயுர்வேத மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது.