அற்புதமான மருத்துவ பயன் கொண்ட ஓமவல்லி !!
ஓமவல்லி என்று அழைக்கப்படும் அற்புதமான மருத்துவ பயன்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் கொண்ட மிக முக்கியமான மூலிகையாகும். ஓமவல்லி ( கற்பூரவல்லி )பாரம்பரியமாக குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு சளி மற்றும் இருமல் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகிறது.
இது நரை முடி மற்றும் பொடுகு போன்ற முடி பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும், எடை இழப்புக்கு உதவுவதற்கும், முடி வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் மற்றும் ஆஸ்துமா மற்றும் காய்ச்சலுக்கு சிகிச்சையளிப்பதற்கும் பயன்படுகிறது.
இந்த இலையிலிருந்து சாறு எடுத்து சர்க்கரையுடன் கலந்து நெற்றியில் பற்றுப்போடலாம். இதனால் ஜலதோஷம், தலைவலி நீங்கும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனையும் தீரும்.
இந்த இலையை அரைத்து நீர் கலந்து கொதிக்க வைத்து, ஏலக்காய், கிராம்பு, ஒரு ஸ்பூன் தேன் கலந்து 3 நாள் தினமும் 2 வேளை குடித்தால் கபம் பிரச்சனை உள்ளவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும். ஓமவள்ளி இலையை தண்ணீரில் சேர்த்து சுடச்சுட ஆவி பிடித்தாலும் தீர்வு கிடைக்கும்.
முக பொலிவுக்கும் இந்த இலைகள் பயன்படுகின்றன.. ஓமவள்ளி இலைகளை, கடலை மாவு, அரிசி மாவு போன்றவற்றுடன் ரோஸ் வாட்டர் கலந்து மிக்சியில் அரைத்து, முகத்தில் பேஸ்ட் போல தடவி 20 நிமிடம் ஊறவைத்து கழுவிவிட வேண்டும். வாரம் 2 அல்லது 3 முறை செய்தாலே, முகப்பொலிவு கூடிவிடும். முக பொலிவுக்கும் இந்த இலைகள் பயன்படுகின்றன.
அம்மை பாதிப்பு ஏற்பட்டு அதன் தழும்புகள் இருந்தால் அதனைப் போக்க ஓமவல்லி இலையை பயன்படுத்தலாம். ஓமவல்லி இலையை அரைத்து அதனை பற்றுப் போல தழும்புகள் உள்ள இடத்தில் போட வேண்டும். பத்து நிமிடங்கள் போட்டு காய்ந்த பிறகு கழுவிடலாம். அம்மைத் தழும்பு மட்டுமல்லாது கட்டிகள் மற்றும் பருக்களுக்கும் ஓமவல்லி இலைகள் சிறந்த நிவாரணத்தை கொடுத்திடும்.