டெல்லியில் உள்ள ஸ்ரீ குரு கோபிந்த் சிங் கல்லூரியில் தீ விபத்து!!

Update: 2025-05-15 09:37 GMT

delhi fire accident

டெல்லியின் பிதாம்பூரா பகுதியில் உள்ள ஸ்ரீ குரு கோபிந்த் சிங் (ஜிஜிஎஸ்) வணிகக் கல்லூரியில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. முதல் மாடியில் உள்ள கல்லூரி நூலகத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், பின்னர் இரண்டாவது மற்றும் மூன்றாவது தளங்களுக்கும் பரவியதாகவும் கூறப்படுகிறது. பல்கலைக்கழகத்தின் ஜன்னல்களில் இருந்து பெரும் புகை வெளியேறியதுடன் தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் அப்பகுதியில் இருந்த மக்கள் பீதி அடைந்தனர். தீவிபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 11 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீவிபத்தில் யாருக்காவது காயங்கள் ஏற்பட்டதா என்ற தகவல் வெளியாகவில்லை. தீவிபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News