தென் ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 49 பேர் உயிரிழப்பு!!
தென் ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 49 பேர் உயிரிழந்துள்ளனர்.;
By : King 24x7 Desk
Update: 2025-06-12 06:24 GMT
South africa
தென்னாப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. பலத்த மழை காரணமாக தென் ஆப்பிரிக்காவின் போக்குவரத்து மற்றும் மின்சார நெட்வொர்க்குகள் பாதிக்கப்பட்டுள்ளன. முன்னதாக ஒரு பள்ளிப் பேருந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் 8 பேர் உயிரிழந்தனர். காலநிலை மாற்றத்தின் காரணமாக தென்னாப்பிரிக்காவில் கடுமையான மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டு வருகிறது. அந்நாட்டில் ஏப்ரல் 2022 இல் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட புயலில் சுமார் 400 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.