ரயில் விபத்து: சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியதில் 6 பேர் பலி!!

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் அருகே லாக்காடன் பகுதியில் சரக்கு ரயில் மீது, பின்னால் வந்த பயணிகள் ரயில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.;

Update: 2025-11-04 15:09 GMT

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் அருகே லாக்காடன் பகுதியில் சரக்கு ரயில் மீது, பின்னால் வந்த பயணிகள் ரயில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரயில்வே மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காயமடைந்த பயணிகள் அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே நிர்வாகம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. ரயில் விபத்து ஏற்பட்ட பகுதியில் மீட்புப் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

Similar News