ஆந்திராவில் தனியார் பஸ் - லாரி மீது மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு!!

ஆந்திர பிரதேச மாநிலம் எலூருவில் நடந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.;

Update: 2025-03-06 07:35 GMT

accident

ஆந்திர பிரதேச மாநிலம் எலூருவில் நடந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 22 பயணிகள் படுகாயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் கூறுகையில், சோடிமல்லா பாலம் அருகே அதிவேகமாக வந்த தனியார் பஸ் லாரி மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த பஸ் ஐதராபாத்தில் இருந்து காக்கிநாடா நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 22 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 பேரின் உடல்கள் எலூரு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவர்களின் விவரங்கள் இன்னும் தெரியவில்லை என்று கூறினர்.Accident விபத்து உயிரிழப்பு

Tags:    

Similar News