"உத்திரமேரூர் தாலுகா ஆபீசில் பராமரிப்பு இல்லாத கழிப்பறை"
"உத்திரமேரூர் தாலுகா ஆபீசில் பராமரிப்பு இல்லாத கழிப்பறை" நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Update: 2024-01-09 06:28 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்தில் 73 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட மக்கள் சான்றிதழ்கள் பெறுவதற்காகவும், கோரிக்கை மனுக்கள் அளிக்கவும், மனை பட்டா பெறுதல் உள்ளிட்ட பல்வேறு காரணமாக, உத்திரமேரூர் தாலுகா அலுவலகம் வந்து செல்கின்றனர். மேலும், இங்குள்ள இ-சேவை, ஆதார் சேவை மையங்களுக்கும் ஏராளமானோர் வருகின்றனர். வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் அவ்வப்போது அலுவலகத்திற்கு வருகின்றனர். அலுவலக ஊழியர்களும் பணியாற்றுகின்றனர். இந்த அலுவலகத்தில், ஊழியர்கள் மற்றும் மனுதாரர்கள் பயன்பாட்டிற்காக மேல் தளத்தில் கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கழிப்பறை முறையாகவும், பராமரிப்பு இல்லாததால் சுத்தமின்றி, சுகாதாரமற்ற முறையில் காணப்படுகிறது. கழிப்பறைக்கு சென்று வரும் மக்கள் முகம் சுளித்தபடி செல்கின்றனர். தொடர்ந்து துர்நாற்றும் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அவலம் உள்ளது. எனவே, உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நவீன கழிப்பறை வசதி ஏற்படுத்துவதோடு, தற்போதுள்ள கழிப்பறையை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.