தனியார் ஆம்னி பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்து.பேருந்து முற்றிலும் எரிந்து நாசம்
அதிர்ஷடவசமாக உயிர் தப்பிய பயணிகள்.
கோவை:திருவண்ணாமலையில் இருந்து கோவைக்கு ஆகாஷ் டிராவல்ஸ் என்ற தனியார் ஆம்னி பேருந்து முப்பது பயணிகளுடன் நேற்று வந்த கொண்டு இருந்தது.பேருந்து கோவை பீளமேடு KMCH மருத்துவமனை அருகே வந்தபோது திடீரென தீப்பற்றியதை தொடர்ந்து சுதாரித்த ஆம்னி பேருந்து ஓட்டுனர் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரையும் பேருந்தில் இருந்து கீழே இறக்கி விட்டுள்ளார்.அனைவரும் வாகனத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட நிலையில் தீ ஆம்னி பேருந்து முழுவதும் பரவியதில் பேருந்து முழுமையாக எரிந்தது.இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பீளமேடு தீயணைப்பு துறையினர் தீயை முழுமையாக அனைத்தனர்.அதற்குள் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமான நிலையில் தீ விபத்துக்கான காரணம் குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்தின் டீசல் டேங்கில் ஏற்பட்ட கோளாறு மற்றும் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.இந்த தீ விபத்தில் நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.