மண் குவியல்களை அகற்றி சாலையை சீரமைக்க மாநகராட்சி ஆணையாளர் உத்தரவு!
நடைபெறும் திட்டப் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுரை.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட திருச்சி சாலை சிங்காநல்லூர் பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் சிவ குரு பிரபாகரன் இன்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது சிங்காநல்லூர் பகுதிகளில் குடிநீர் திட்டப்பணிகள், பாதாள சாக்கடை திட்டப் பணி மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பணிகளுக்கு குழாய்கள் பதிக்கப்பட்ட சாலைகளின் ஓரங்களில் தோண்டப்பட்ட மண் குவிந்து கிடப்பதை கண்ட ஆணையர் உடனடியாக மண்களை அகற்றி சாலையினை சீர் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.மேலும் நடைபெற்று வரும் திட்ட பணிகளை விரைவாக தாமதம் இன்றி முடிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின்போது மாநகர தலைமை பொறியாளர் அன்பழகன்,கிழக்கு மண்டல உதவி ஆணையர் முத்துசாமி, மாமன்ற உறுப்பினர் சிவா,உதவி நகர திட்டமிடுநர் புவனேஷ்வரி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.