குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் தர்ணாவில் ஈடுபட்ட பெண்!

பொய் புகாரின் பேரில் கணவரை போலீசார் கைது செய்ய முயற்சிப்பதாக குற்றச்சாட்டு.

Update: 2024-07-22 08:09 GMT
பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த வெள்ளிமணி கணவர் ஜெஸ்டின் சுந்தர் சிங் மற்றும் தனது இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தவர் கணவர் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதில் கண் பார்வை இழந்த நிலையில் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுப்பதுடன் பொய் புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பெண் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்திருந்தார்.மனு அளிக்க வந்தவர் தனது இரு குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலக வாசலில் தர்ணாவில் ஈடுபட்டவரை சமாதானப்படுத்திய காவலர்கள் மனு அளிக்க அழைத்து சென்றனர்.இதுகுறித்து வெள்ளிமணி கூறுகையில் தான் ஊசி-பாசி விற்பனை செய்து வருவதாகவும் கணவர் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வரும் நிலையில் தங்களது பகுதியில் வசித்து வரும் சிறாருக்கு 13 வயது சிறுமியை திருமணம் செய்து வைக்க முயற்சிகள் நடைபெற்றதாக தெரிவித்தார்.சிறார் திருமணம் நடைபெற்றால் புகார் அளிப்பேன் என கணவர் கூறியதால் பகைமையில் இருந்த சிறுவனனின் குடும்பம் கடந்த 28ம் தேதி பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் வைத்து ஜெஸ்டின் சிங்கை தாக்கியதால் பலத்த காயமடைந்துள்ளார். சிகிச்சைக்காக அனுமதிக்கபட்ட நிலையில் வெள்ளிமணி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறாரின் குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்யபட்டுள்ளது.அதே பகுதியில் உறவினர் வீட்டில் வசித்து வரும் சிறாரின் குடும்பம் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தனது மகள்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் இருப்பதாக தெரிவித்தார்.இந்த நிலையில் 15ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்து நாடகம் அரங்கேற்றிய சிறாரின் குடும்பம் பழிவாங்கும் நோக்குடன் கணவர் ஜெஸ்டின் சிங்கை குற்றவாளியாக்க முயற்சிப்பதாகவும் சிறைக்கு அனுப்ப முயற்சிப்பதாக தெரிவித்தார்.சிறார் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொய் புகாரில் இருந்து தனது கணவரை விடுவிக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

Similar News