போச்சம்பள்ளி அருகே ஒட்டுமொத்த கிராமமே திருத்தணிக்கு காவடி எடுத்து நடைபயணம் வெறிச்சோடிய கிராமம்
போச்சம்பள்ளி அருகே ஒட்டுமொத்த கிராமமே திருத்தணிக்கு காவடி எடுத்து நடைபயணம் வெறிச்சோடிய கிராமம்
போச்சம்பள்ளி அருகே ஒட்டுமொத்த கிராமமே திருத்தணிக்கு காவடி எடுத்து நடைபயணம் வெறிச்சோடிய கிராமம் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த குள்ளனூர் கிராமத்தில் 500க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் பழமை வாய்ந்த பால முருகன் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆடிக்கிருத்திகையொட்டி சாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம், இந்த திருவிழா நடைபெறுவதற்கு முன்னதாக ஒட்டுமொத்த கிராம மக்களும் இந்த மாதம் முழுவதும் விரதமிருந்து கையில் மஞ்சள்கொம்பு காப்பு கட்டி ஓட்டு மொத்த கிராமமே நடைபயணமாக சென்று திருத்தணியில் முருகப்பெருமானை வணங்கி வழிபாடு செய்து வந்த பின்னர் குள்ளனூர் பாலமுருகன் கோவிலில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் அதே போல் இந்த ஆண்டும் திருவிழாவிற்கு முன்னதாக திருத்தணி கோவிலுக்கு செல்ல குள்ளனூர் கிராம மக்கள் விரதமிருந்து காவடி எடுத்து மஞ்சள் ஆடை அணிந்து நடைபயணமாக இன்று சென்றனர். இதில் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட மக்கள் காவடி எடுத்தும் பன்னீர் குடம் தூக்கியும் பக்தியுடன் நடைபயணம் மேற்கொண்டனர். இதில் குள்ளனூர் ஊர் கவுண்டர் கேசி.கோவிந்தன், மந்திரி கவுண்டர் சீனிவாசன், முன்னால் கவுன்சிலர் கே.சி.செல்வம், நெம்பர் கிருஷ்ணன், குருசாமிகள் சின்னசாமி, கோவிந்தசாமி, கொட்டாய் நாகராஜ், பைனான்ஸ் விஜயன், கே.முருகன், கிருஷ்ணன், ஜேசிபி முருகன், வணங்காமுடி, இரஞ்சித்குமார், சரண்குமார், பூபதி, டைலர் சக்திவேல் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.