கார் விபத்தில் மூளை சாவு அடைந்த மாணவர்!
மாணவரின் உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோர்.
கோவை:கணியூர் சுங்காசாவடி அருகே கடந்த 17ஆம் தேதி காரில் கோவையிலிருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டு இருந்த ஐந்து கல்லூரி மாணவர்கள் விபத்திற்கு உள்ளாகினர்.அந்த விபத்தில் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த மாணவர்கள் விஷால் மற்றும் பூபேஷ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.மேலும் காரில் பயணித்த நரேன்,பிரணவ் மற்றும் ஒரு வாலிபர் படுகாயம் அடைந்த நிலையில் மூவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.அதில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த நரேன்(19) கோமாவிற்கு சென்ற நிலையில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். இந்நிலையில் நரேன் மூளை சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததை தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு அவரது பெற்றோர் தீர்மானித்துள்ளனர். இதனை அடுத்து அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட உள்ளது.