தமிழக எம்.பி.க்கள் தனிமனித தாக்குதல் செய்கின்றனர்-வானதி சீனிவாசன்!
திமுக ஆட்சியில் உழைப்பு சுரண்டலுக்கு ஆளாக்கபடுவதாகவும் குற்றச்சாட்டு.
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து காத்திருப்போர் கூடம் அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.இந்நிகழ்வில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன்,அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா உட்பட பல்வேறு மருத்துவர்கள் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வானதி சீனிவாசன் கோவை அரசு மருத்துவமனையில் புதிய காத்திருப்போர் கூடம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் கட்டும் பணிகள் பூமி பூஜை உடன் துவங்கியுள்ளதாகவும் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் 5 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி அமைக்கவும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது என்றார்.கோவை அரசு மருத்துவமனை என்பது கோவை மாவட்டம் மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து சிறப்பு சிகிச்சைகளுக்காக பெருமளவு மக்கள் வந்து செல்வதாகவும் இங்கு மக்கள் காத்திருப்பதற்கான இட வசதி முக்கியமானதாக உள்ளது.குறிப்பாக பிரசவ சிகிச்சை பிரிவின் அருகே பெண்கள் மற்றும் குழந்தைகள் காத்திருப்பதற்கு இந்த காத்திருக்கும் கூடம் 20 லட்சம் மதிப்பீட்டில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.Jaica நிதியுதவியோடு இங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்பு இன்னும் முழுமையாக செயல்படவில்லை எனவும் இதனை முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தாக கூறிய அவத் இது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளோம் எனவும் இந்த பணிகளை விரைவாக முடித்து தூய்மையான நிலையில் இந்த வளாகத்தை பராமரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுவது மரபு சார்ந்த விஷயமாக இல்லை எனவும் மக்கள் பிரச்சனைகளை பேசுவதற்கு பதிலாக தனிப்பட்ட ரீதியில் தாக்குதல் செய்து வருவதாக கூறியவர் தமிழகத்தில் இருந்து தேர்வான நாடாளுமன்ற உறுப்பினர்களும் தனி மனித தாக்குதல்களை செய்கின்றனர் எனவும் குறிப்பாக நிதி அமைச்சரையும் அவர் சார்ந்த சமுதாயத்தையும் தாக்கி பேசுகின்றனர் என்றார்.திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பிராமணர்கள் குறித்து விமர்சிப்பதை தொடர்ந்து செய்து வருவதாகவும் நாங்களும் அவரது மனைவி அவர் பேசுகின்ற மொழி குறித்து பேசினால் நன்றாக இருக்காது என்றவர் சமூக நீதிப் பேசும் திமுகவினர் இதை செய்வது சரியானது அல்ல என்றார். தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து துறைகளிலும் லஞ்சம் ஊழல் பெருகி உள்ளதாகவும் அதனால் தான் சரியான ஆட்சியை தேர்ந்தெடுக்க வேண்டும் என கூறுகிறோம்.சென்னை பெருவெள்ளம் ஏற்பட்ட போது நிபுணர் குழு அமைக்கப்பட்டது.எந்த பிரச்சனை என்றாலும் அதற்கு உடனடியாக திமுக அரசு குழு அமைக்கும்.ஆனால் செயல்படுவதில் எதுவும் இருக்காது என்றவர் நிபுணர் குழு அமைத்த பின்பும் சென்னை வெள்ள பாதிப்பு அதே நிலையில் தான் உள்ளது என்ற அவர் திராவிட மாடல் ஆட்சியில் நிபுணர் குழு அமைப்பதில் குறைகளே கிடையாது எனவும் ஆசிரியர்கள்,தூய்மை பணியாளர்கள் என அனைவரும் இந்த ஆட்சியில் உழைப்பு சுரண்டலுக்கு ஆளாக்கப்படுகின்றனர் என தெரிவித்தார். ஜாதிவாரி கணக்கெடுப்பினை மாநிலங்களே மேற்கொள்ளலாம் எனவும் இதற்கு எந்த தடையும் இல்லை என்றவர் ஒரு மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள சமுதாயம் மற்றொரு மாநிலத்தில் குறைவாக இருக்கும் எனவே மாநில அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ளலாம்.திமுக அரசுக்கு தைரியம் இல்லாததால் இதை செய்யாமல் உள்ளதாகவும் இது குறித்து திரும்ப திரும்ப மத்திய அரசிடம் கேட்பது என்பது பொறுப்பை தட்டிக் கழிப்பது போன்றது என்றார். கோவை மாநகராட்சியில் இருந்த முன்னாள் மேயர் 27 லட்சம் ரூபாய் டீ செலவு செய்து விட்டு சென்றுள்ளார்.எனவே கோவை மாநகராட்சிக்கான புதிய மேயரை தேர்ந்தெடுக்க வரும் உதயநிதி இது குறித்து பதிலளித்தால் நன்றாக இருக்கும் என்ற அவர் மேலும் எந்த விதமான குளறுபடிகளும் இல்லாமல் சரியான முறையில் மேயர் தேர்வு செய்ய வேண்டும் என்றார்.ரயில் விபத்துகளை பொறுத்த வரை தொழில் நுட்பங்களை பயன்படுத்தி விபத்துகளை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்தவர் தொழில்நுட்ப கோளாறு என்றாலும் மனிதக் கோளாறு என்றாலும் அதை சரி செய்து மக்களை காப்பது அரசின் கடமை அதை மத்திய அரசு செய்து வருவதாக தெரிவித்தார்.