பத்திரிக்கையாளர் என தெரிவித்து ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்ய முயற்சித்த நபரை கைது செய்த திண்டுக்கல் சைபர் கிரைம் காவல் துறையினர்.
பத்திரிக்கையாளர் என தெரிவித்து ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்ய முயற்சித்த நபரை கைது செய்த திண்டுக்கல் சைபர் கிரைம் காவல் துறையினர்.
திண்டுக்கல், தேனி மாவட்டத்திற்கு நக்கீரன் பத்திரிக்கை தலைமை நிருபராக உள்ள திண்டுக்கல் மாவட்டம், செல்லாண்டியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் தங்களது பத்திரிக்கை நக்கீரன் பெயரில் நிருபர் என ஆள்மாறாட்டம் செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கொடுக்கப்பட்ட புகார் பேரில் திண்டுக்கல் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அவர்கள் உத்தரவின்படி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தெய்வம் அவர்களின் மேற்பார்வையில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் விக்டோரியா லூர்து மேரி அவர்கள் மற்றும் திண்டுக்கல் சைபர் கிரைம் காவல் துறையினர் துரிதமாக நடவடிக்கை எடுத்து பத்திரிக்கை நிருபர் என ஆள்மாறாட்டம் செய்த பெரம்பலூர் மாவட்டம் நல்லறிக்கை, மேலத்தெருவை சேர்ந்த இளங்கோவன் (46) என்பவரை புதன்கிழமை மாலை 4 மணியளவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.