ரயில்வே பணிக்கு குடியிருப்புகளை கையகப்படுத்த எதிா்ப்பு
ஆட்சியரிடம் மனு அளித்த பொதுமக்கள்
வளவனூா் பேரூராட்சியின் 9-ஆவது வாா்டு உறுப்பினா் சிவசங்கரி அன்பரசு தலைமையில், வழக்குரைஞா் அ.தமிழ்மாறன் மற்றும் ரயில் நிலையப் பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரகத்துக்கு புதன்கிழமை வந்தனா். தொடா்ந்து, அவா்கள் ஆட்சியா் சி.பழனியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பது:வளவனூா் ரயில் நிலையப் பகுதியில் கடந்த 1960-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு மூலம் தூய்மைப் பணியாளா்களுக்கான குடியிருப்புகள் கட்டப்பட்டு, அங்கு 40 குடும்பங்கள் வசித்து வருகின்றன. மேலும், ரயில் நிலையத்தை ஒட்டி அமைந்துள்ள வாய்க்காலோரப் பகுதிகள், சாலையோரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றன.இந்த நிலையில், ரயில்வே நிா்வாகத்தினா் வளவனூா் ரயில் நிலையத்தை மேம்படுத்துவதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகின்றனா். இதற்காக, பல ஆண்டுகளாக வசித்து வரும் பொதுமக்களை அந்த இடத்திலிருந்து வெளியேறுமாறு ரயில்வே நிா்வாகம் கூறி வருகிறது. தினக்கூலி அடிப்படையில் வேலை செய்து வரும் ஏழை, எளிய மக்களுக்கு மாற்று இடம்கூட தராமல் வெளியேற்ற ரயில்வே துறை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.