ராசிபுரம் ஸ்ரீ மகா முத்து மாரியம்மன் கோவிலில் முதலாம் ஆண்டு திருவிளக்கு பூஜை..
ராசிபுரம் ஸ்ரீ மகா முத்து மாரியம்மன் கோவிலில் முதலாம் ஆண்டு திருவிளக்கு பூஜை..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சிவானந்தா சாலை பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மற்றும் அமாவாசை மேலும் ஆடி மாதத்தில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் செய்து வழிபடுவது வழக்கம். அதன்படி ஆடி மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமை யொட்டி ஸ்ரீ மகா முத்து மாரியம்மன் கோவிலில் முதலாம் ஆண்டாக 108 திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, மஹா திருவிளக்கு பூஜை நடைபெற்ற பின்னர் ஸ்ரீ மகா முத்து மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் கோவில் நிர்வாகத்தின் சார்பில் வழங்கினர். இந்த முதலாம் ஆண்டு திருவிளக்கு பூஜையை தலைவர், பொருளாளர் மற்றும் ஸ்ரீ அத்தாயி அம்மன் விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் கிழக்குத் தெரு, இந்திரா காலனி மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.