கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைக்கும் முதலவர் ஸ்டாலின்!
முழுவீச்சில் நடைபெறும் முன்னேற்பாடு பணிகள்.
தமிழ் புதல்வன் திட்டம்,உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பால திறப்பு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட பணிவுகளை துவக்கி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை கோவை வருகிறார். தொடர்ந்து சூலூர் அடுத்த கணியூர் இந்திரா நகர் பகுதியில் தனியார் நிலத்தில் 8 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையையும் திறந்து வைக்கிறார். அங்கு அமைக்கப்பட்டுள்ள அறிவு சார்ந்த நூலகத்தையும் திறந்து வைக்க உள்ள முதலமைச்சர் 106 அடி உயர கம்பத்தில் திமுக கொடியை ஏற்றி வைக்கிறார்.இந்த நிகழ்வினை ஒட்டி முன்னேற்பாட்டுப் பணிகள் துரிதக் கதியில் நடைபெற்று வருகின்றன.இந்தப் பணிகளை அமைச்சர்கள் எ.வ.வேலு,முத்துசாமி,கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.அறிவு சார் நூலக கட்டிட வளாகத்தின் சுவர்களில் பெரியார்,அண்ணா, அன்பழகன் மற்றும் கருணாநிதி ஆகியோரது படங்களுடன் திமுக அரசின் காலை உணவு திட்டம்,மகளிர்க்கு நகரப் பேருந்துகளில் இலவசம் உள்ளிட்ட சாதனை விளக்க புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.